போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டியதே எமது முதற் கடமை. அதற்கான நிச்சயம் முயற்சிப்போம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கருத்து வெளியிட்டிருந்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது.
முப்பது வருட யுத்தம் நிறைவுக்கு வந்து பதினொரு வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய ஏற்பாடுகள் எதுவும் இதுவரை நிறைவாக வழங்கப்படவில்லை என்பதை வேதனையோடு ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
நடைபெற்ற யுத்த நிலைமைகளினால் பல குடும்பங்கள் பெண் தலைமைக் குடும்பங்களாக்கப்பட்டுள்ளனஇ பலர் காணாமலாக்கப்பட்டுள்ளனர்இ இன்னும் சிலர் மாற்றுவலுவுடையோர்களாக வாழ்ந்து வருகின்றனர்இ ஏராளமான இளைஞர் யுவதிகள் எவ்வித தொழில் ஏற்பாடுகளுமின்றி வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்த முடியாது சிரமப்படுகின்றனர்.
மேற்படி போரால் பாதிக்கப்பட்ட ஒட்டு மொத்த குடும்பங்களினதும் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டியது எமது தலையாய கடமையாக கண் முன்னே இருக்கின்றது.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வாழ்வாதார பொறிமுறையை அவசரமாக உருவாக்க வேண்டியுள்ளது. எமது அரசியல் தீர்வை நோக்கிய புனிதப் போராட்டத்திலே தமிழ் மக்களின் கனவுகளை சுமர்ந்தவர்களாக தூய எண்ணத்தோடு தமிழ்த் தேசிய போராட்டத்திலே பங்கெடுத்த அதிலே உயிர்களைப் பிரிந்தவர்களின் குடும்பங்கள்இ உடல் அங்கங்களை இழந்தஇ வாழ்வியலை இழந்த மக்களின் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையிலே மாகாணசபையை பார்த்தோம்.
மாகாண சபையின் ஊடாக இவ் வேலைத்திட்டங்களை முறையாக முன்னெடுக்க கூடியதாக இருந்திருக்கும். ஆயினும் நாம் நம்பிக் கொண்டு வந்த முதலமைச்சர் அவர்களால் மாகாணசபைக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சில குழப்பங்களினால் அவற்றை முன்னெடுக்க முடியாது போனமை கவலைக்குரிய விடயமாகும்.
முப்பது ஆசனங்களைக் கொண்டிருந்தும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் செய்ய முடியாது போனது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. நானும் அதில் ஒரு அங்கத்தவராக இருந்துள்ளேன். குறித்த மாகாண சபை காலத்தில் செய்;து முடிக்க முடியாமல் போன விடயங்களை புதிய பொறிமுறை ஒன்றிற்கூடாக வடிவமைக்க வேண்டிய தேவை உள்ளது.
தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக போரிட்டு இன்று ஜனநாயக ரீரோட்டத்தில் எம்மோடு வாழ்கின்ற மற்றும் இடம்பெற்ற யுத்த நிலைமைகளில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டிய தேவை அவசரமானதாக அமைகின்றது.
அதற்கான திட்ட முன்மொழிவுகளை நாம் நிச்சயம் மேற்கொள்வோம். அவர்களுக்கான முழுமையான வாழ்வாதார முறைமை ஒன்றுக்கான உதவி மற்றும் ஒத்துழைப்புக்களை நாம் ஒரு தடவை ஏற்படுத்திக் கொடுத்தால் போது. நிச்சயமாக அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறும்.
இவ் வேலைத்திட்டத்தில் அரசை மாத்திரம் நாம் நம்பி எப்பயனும் இல்லை. எமது உறவுகள் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றார்கள். அவர்களின் உதவிகளை நாம் எதிர்பார்க்கின்றோம்.
அவர்களின் ஒத்துழைப்புக்களுடன் முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமை ஒன்றிற்கூடாக முன்னாள் போராளிகள்இ காணாமலாக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள்இ பெண்தலைமைக் குடும்ங்கள்இ போரினால் பாதிக்கப்பட்டு மாற்றுவலுவுள்ளோர் குடும்பங்களாக வாழ்ந்து வருவோர் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் எமது உறவுகள் அனைவருக்குமான உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
இதனை ஒரு கூட்டு முயற்சிக்கூடாக முன்னெடுத்து தமிழ் மக்களின் விடயலுக்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு எம்மால் நிச்சயம் உதவ முடியும் என்று எதிர்பார்க்கின்றேன். நம்புகின்றேன். புலம்பெயர் தேசத்து உறவுகள் நிச்சயம் இவ்விடயத்தில் அதீத கவனம் செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. என்றார்.
Post a Comment