கமக்கார அமைப்பு அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு - Yarl Voice கமக்கார அமைப்பு அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு - Yarl Voice

கமக்கார அமைப்பு அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு


மறவன்புலவு கமக்கார அமைப்புக்கான அலுவலகம் மற்றும் அப்பகுதி விவசாயிகளுக்கான உரக் களஞ்சியம் ஆகியவற்றுக்கான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மறவன்புலவில் இடம்பெற்றது

மறவன்புலோ கிராமத்தைச் சேர்ந்த இளையப்பா சட்டநாதர் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில்
மறவன்புலோவில் காற்றாலை மின்னுற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்  சீலைக்ஸ்   நிறுவனத்தினரால் மூன்று மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய கட்டிடம்
அமைக்கப்படவுள்ளது

 உர மானியத்தை விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கான களஞ்சியமும்
அதனோடு இணைந்த கமக்கார அமைப்பு அலுவலகம் மலசலகூடம் கிணறு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டிடமாக இது அமைய இருக்கின்றது

தென்மராட்சி தெற்கில் மறவன்புலவு தனங்கிளப்பு கோவிலாக்கண்டி கைதடி நாவற்குழி உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் சுமார் 1400
ஏக்கர் வயல் நிலங்களுக்கான உரத்தினை
அமையவுள்ள புதிய உரகளஞ்சியத்திலிருந்து விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 கட்டடத்திற்கான அடிக்கல்லினை
சீலெக்ஸ் நிறுவனத்தின்  பணிப்பாளர் சமீர நிர்வாக இயக்குனர் ஜெயந்த கமகே நிறுவனத்தின் மக்கள் சமூகப் பணிக்கான
பொறுப்பதிகாரி பொறியியலாளர் ஸ்ரீதரன்  திட்டத்திற்கான பணிப்பாளர் பொறியியலாளர் ஜேம்ஸ்ரஜி கமநல சேவை நிலைய பெரும்பாக உத்தியோகத்தர் கோகுலன் கிராமசேவையாளர் தனபாலசிங்கம் சமூக சேவையாளர் சட்டநாதர் பொருளாதார உத்தியோகத்தர் பேட்ரிசியா கமக்காரர் அமைப்பின் தலைவர் திருஞானசம்பந்தர் செயலாளர்  சிவாகுலன்
கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஆனந்தரஞ்சன் ஆகியோர் நாட்டி வைத்தனர்.










0/Post a Comment/Comments

Previous Post Next Post