யூலைக் கலவரம் நடந்தது என்ன ? அனுபவத்தை விளக்கும் தவராசா - Yarl Voice யூலைக் கலவரம் நடந்தது என்ன ? அனுபவத்தை விளக்கும் தவராசா - Yarl Voice

யூலைக் கலவரம் நடந்தது என்ன ? அனுபவத்தை விளக்கும் தவராசா


யூலைக்கலவரம் குறித்து தனது முகநூலில் ஐனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் கொழும:புக் கிளைத் தலைவருமான கே.வி.தவராசா குறிப்பிட்டுள்ளதாவது..

குட்டிமணி_தங்கத்துரை_ஜெகன்_கைது 1981
பிரபாகரன் சூஉமாமகேஸ்வரன் சூபாண்டிபஜாரில்_துப்பாக்கி_சூடு-1982
1981 சூஎனது_முதலாவது_வழக்கு
1983 குட்டிமணி_கொடூரமாக_கொலை
1983 இனவழிப்பு

சூபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்சட்டமா அதிபரினால். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சூமுதலாவது_வழக்கு

40 ஆண்டுகளுக்கு முன்னர் குட்டிமணி என்ற பெயர் இலங்கையில் பெரும்உணர்வலைகளை ஏற்படுத்தியது. அவருக்கு பெற் றார் இட்டபெயர்  செல்வராஜா யோகச்சந்திரன் என்பதாகும். அவர் 1970களில் இலங்கையில் தமிழ் போராளிக் குழுத் தலைவர்களில் ஒரு முன்னணி தலைவராவார். 1983 ஜூலை 25 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழ் கைதிகளில் அவரும் ஒருவராவார்.

பயங்கரலாதத் தடைச் சட்டத்தின் கீழ் முதலாவது வழக்காக குட்டிமணி தங்கத் துரை ஜெகன் ஆகிய மூவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்குத்தான் நான் சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் எடுத்த பின்னர் நான். கனிஸ்ட சட்டத்தரணியாக ஆஜராகிய முதல் வழக்காகும்.

அன்றிலிருந்து இன்றுவரை 40 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பல நூற்றுக்கணக்காண வழக்குகளில் நாட்டிலுள்ள பல நீதிமன்றங் களில் வாதாடிய போதிலும் இந்த வழக்கின் நிகழ்வுகள் அழியாத நிகழ்வுகளே;

1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற வங்கிக் கொள்ளையிலும் இரட்டைக் கொலை யுடனும் தொடர்புடையவர்கள் என அரசினால் சந்தேகிக்கப்பட்டிருந்த டெலோ இயக்கத்தின் தலைவரான தங்கத்துரை குட்டிமணி என அழைக்கப்படும் யோகச்சந்திரன் ஜெகன் என்கின்ற ஜெகநாதன் ஆகிய மூவரும்1981 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 5ஆம் திகதி படகுமூலம் இந்தியாவிற்குத் தப்பிச் செல்வ தற்காக பருத்தித்துறைக்குப் பக்கத்தில் மணற் காட்டுக் கடற்கரையில் வள்ளத்துக்காக சில மணிநேரம் காத்திருந்தனர் ஆனால் குறித்த வள்ளம் குறிக்கப்பட்ட. நேரத்திற்கு. வராத நிலையில்

குட்டிமணி_தற்கொலை_முயற்சி

தொடர்ந்து மாலைமூன்றேகால்மணியளவில் துப்பாக்கி முனையில சுற்றி வளைத்த கடற் படையினரும் பொலிசாரும் குட்டிமணியை கைது செய்ய முயற்சித்த வேளையில் தனது கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே நெற்றியில் சுட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற போது தங்கத் துரை கைத்துப்பாக்கியை தட்டிவிட குறி சற்றுத்தவறி தலையில் சூட்டுக்காயத்துடன் குட்டிமணி மயங்கி கீழே சாய்ந்தார்

அதைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்ய ப்பட்டு விசாரணைக்காக ஆனையிறவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுப் பின்னர் கொழும்புக்கு கொண்டுவந்தனர்.

பயங்கரவாதத்_தடைச்சட்டம்

ஆனையிறவு தடுப்பு முகாமில் தடுத்துவைக் கப்பட்டு சித்திரவதை. செய்யப்பட்டு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் சட்டமா அதி பர் சிவா பசுபதியினால் கொழும்பு மேல் நீதி மன்றத்தில் செல்வராஜா யோகச்சந்திரன் (குட்டிமணிஇ)ப் தங்கத்துரைஇ ஜெகன் ஆகிய மூவருக்கும் எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மேல். நீதிமன்றில் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது.

பெருமளவிலான_பார்வையாளர்கள்

இந்த வழக்கு விசாரணைக்குஎடுத்துக் கொள் ளப்பட்ட. பொழுது குட்டிமணி மிகவும் வசீகர மான தோற்றமுள்ளவராகவும் அவரது பெயர் அந்தக் காலகட்டத்தில் மிகவும் பிரபல்யமாக காணப்பட்டதாலும் அதிகளவு பல்கலைக்கழக மாண மாணவிகள் பொது மக்கள் உள்நாட்டு வெளிநாட்டுப். பத்திரிகையாளர்கள் நீதி மன்றில் குழுமியிருந்தனர்.

விசேடமாகக் கூறப்போனால் 1981ஃ1982ஆம் ஆண்டு காலகட்டத்தில் குட்டிமணியென்றால் தெரியாதவர்களே இல்லாத அளவிற்கு மிக வும். பிரபல்யமாகி இருந்தபடியால் வழக்கு விசா ரணையை பார்ப்பதற்காக நீதிமன்றம் வந்தவர்களை விட குட்டிமணியை பார்பத ற்காக வந்த பார்வையாளர்களே அதிகமாக மேல் நீதிமன்றில் நிரம்பி காணப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் அரச தரப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சுனில் டி சில்வாவும் கனிஸ்ட சட்டத்தரணிகளாகமொகான் பீரிசும் காந்திலால் குமாரசிறியும் ஆஜராகியிருந்த னர். இதில் விசேட அம்சம் யாதெனில் இந்த வழக்கை. தாக்கல் செய்த சட்டமா அதிபர் சிவா பசுபதியை தொடர்ந்து இந்த வழக்கில் அரசதரப்பில்ஆஜராகிய சுனில் டி சில்வாவும் கனிஸ்ட சட்டத்தரணியுமான மொகான் பீரீஸ்சும் பிரதம நீதியரசராக பதவி வகித்து ஒய்வு பெற்றுள்ளனர்

இந்த வழக்கில் எதிரிகளாக பெயர் குறிப்பி டப்பட்ட குட்டிமணி  தங்கத்துரைஇ ஜெகன் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி முருகேசு சிவ சிதம்பரம்இ நவரட்ணம்இ(கரிகாலன்) உருத்திர மூர்த்தி.சிறிஸ்கந்தராஜா ஸ்ரீஸ்கந்தகுமார் ஆகியோருடன் கனிஸ்ட சட்டத்தரணியாக ஆஜராகும்; சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

முதல்_வழக்கு

மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த பயங் கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய் யப்பட்ட முதலாவது வழக்கான இந்த வழக்கே நான் முதன் முதலாக கனிஸ்ட சட்டத் தரணி யாக நீதிமன்றில் ஆஜராகும் சந்தர்ப்பத்தை யும் ஏற்படுத்திக் கொடுத்தது.

பாண்டி_பஜாரில்_துப்பாக்கிச்_சூடு -1982

தொடர்ந்து இந்த வழக்கு ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசா ரணை நடந்து கொண்டிருக்கையில் தமிழ் நாட்டிலுள்ள பாண்டி பஜாரில் பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் துப்பாக்கியால் ஒருவரை யொருவர் சுட்டுக் கொல்ல முயற்சித்ததைத் தொடர்ந்து பொலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்கள் என்ற செய்தி சட்டத்தரணி நவரட்னத்திற்கு வந்தது.

 அவ்வேளையில் சட்டத்தரணி நவரட்னம் (கரிகாலன்) அவர்கள் எங்களுக்கு கூறியவிடயம் யாதெனில் போரா ட்டம் நடாத்தும் பொடியங்கள்; தாங்கள் ஒரு நாளும் ஒற்றுமையாக மாட்டார்கள். ஆனால் இராணுவத்துடன் சேர்ந்தாலும் அதற்கு ஆச்ச ரியப்பட ஒன்றுமில்லை என்றார் அது நடந்தது சட்டத்தரணி நவரட்னத்தின் கணிப்பு பிற்கால ங்களில் நிஜமானது சில இயக்கங்கள் இராணுவத்துடன் இணைந்து செயல் பட்டமை தெரிந்ததே

அந்த காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பி னர்களாகயிருந்த சட்டத்தரணிகளான ஆலா லசுந்தரம். தங்கத்துரை ஆகியோர் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகள் கொழும்பு நீதிமன்றங்களி நடைபெறும் வேளையில் நீதிமன்றம் வந்து தம்மாலான ஒத்தாசையை வழங்குவதுண்டு

தீர்ப்பு_என்ன_மரண_தணடனை

அரச தரப்பினரதும் எதிர்த்தரப்பினரதும் வாதப் பிரதிவாதங்களின் பின்னர் தீர்ப்பி பிட்பிரி க ஒத்திவைக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்படும் நாளில் நீதிமன்றில் பெருந்திர ளான பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.

நீதிபதி சேனனாயக நீதிமன்ற இருக்கையில் அமர்ந்ததும் குட்டிமணியை தான் ஒரு சாதா ரண குற்றவாளியாகப் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டதுடன் சட்டத்தினால் தேவைப்படுத் தப்பட்டவாறு தீர்ப்பு வழங்க வேண்டியது தனது கடமையென குறிப்பிட்டு என்றோ ஒருநாள் ஜனாதிபதி குட்டிமணிக்கு மன்னி ப்பு வழங்குவாராயின் அதனைக் கேள்வி யுற்று தான் மகிழ்ச்சியடைவதாக கூறி வரலா ற்று முக்கியத்துவம் வாய்ந்த. மரண தண்ட ணை த் தீர்ப்பை 1983ஆம் ஆண்டு பங்குனி மாதம் முதலாம் திகதி வழங்கினார்
;
மரண தண்டணைத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நீதிபதி குட்டிமணியிடம் அவரது இறுதி ஆசை என்ன என்று வினவிய போது தமிழ்
மக்களுக்கான ஒரு சுதந்திர நாட்டிற்கான (தமிழ் ஈழம்) அவரது ஏக்கத்தை குட்டிமணி யின் பதில் உலகுக்கு எடுத்துக் காட்டியது. இதுதான் அவரது பதில்:

(1) எனது மரண தண்டனை நிறைவேற்றப்படு வதற்கு முன்னர் தயவு செய்து எனது கண்க ளை அகற்றி கண்பார்வையற்ற ஒரு தமிழருக்கு அவற்றை பொருத்துங்கள். என் னால் சுதந்திர தமிழ் ஈழத்தைப் பார்க்க முடி யாது போகலாம். எனினும்இ எனது கண்க ளாவது அதனைப் பார்க்கட்டும்.

(2) என்னைத் தூக்கிலிடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குட்டிமணிகள் உருவாகுவார்கள்

அந்த கணப்பொழுதில் நீதிமன்றிற்கு வந்தி ருந்த. பார்வையாளர்களில் கணிசமானவர் கள் மேல் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பையும் குட்டிமணியின். இறுதி விருப்பத்தையும் ஆசையையும் கேட்டு அதிர்ச்சி அடைந்ததை யும் சில பல்கலைக்கழக மாணவர்கள் கண் கலங்கியமையும் மறவாத நினைவேயாகும்

அதனைத் தொடர்ந்து கைவிலங்குகள் மாட்ட ப்பட்ட நிலையில் நீதிமன்றிற்கு வெளியே கொண்டு வரப்பட்ட குட்டிமணி அங்குநின்று கொண்டிருந்த ஊடகவியளாளர்களுக்கும் விசேடமாக அன்றைய காலகட்டத்தில் தின பதி பத்திரிகையின் நீதிமன்ற நீருபரும் தற்பொழுது காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான்இ நடேசபிள்ளை வித்தியாதரன் வீரகேசரி பத்திரிகையின் நிருபர் வரதராஜா மற்றும் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை பார்த்து இறுதியாக குட்டிமணி கூறிய வசனம் பிரிவோம் சந்திப்போம் என்பதே

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் முதன் முதலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ப்பட்டு தொடர்சியாக நான்கு மாதங்களில் விசாரணைகளை துரிதகெதியில் நடாத்தி முடித்து மரண தண்டணை வழங்கிய ஒரே வழக்கு இந்த வழக்கேயாகும்

அவரது மரண தண்டனை தீர்ப்பையடுத்து குட்டிமணி தண்டனை நிறைவேற்றத்திற்காக் காத்திருப்பதற்கென வெளிக்கடை அதிஉயர் பாதுகாப்புச்சிறைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு சிங்கள. மற்றும் தழிழ் கைதிகள் என்ற இரு சாராரும் இருந்தனர் சிங்கள கைதிகள் கொலை இ கற்பழிப்புஇ கொள்ளை முதலிய குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதி களாவர். தமிழ் கைதிகள் அனைவரும் சுதந் திரப் போராளிகள். சிங்கள மற்றும் தமிழ் கைதிகள்அவர்களுக்கிடையில் இனரீதியான மோதல்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக வேறாக வைக்கப்பட்டிருந்தனர்.

குட்டிமணி_நாடாளுமன்ற_உறுப்பினர்

குட்டிமணி சிறையிலிருக்கும் பொழுது 1982 ஓகஸ்ட் 1 ஆம் திகதி அப்போதைய தமிழர் ஜக்கிய விடுதலை முன்னணயின் வட்டுக் கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பி னர் வு. திருநாவுக்கரசு இறந்த பின்னர் போது குட்டிமணி 1982 ஒக்டோபர் 15 ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகுதிக்கான பாராளு மன்ற உறுப்பினராக உத்தியோக பூர்வமாக பெயர் நியமனம் செய்யப்பட்டார். எனினும்இ நீதித்துறை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக குட்டிமணியின் பெயர் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்தது.

அப்போதைய சிறைச்சாலைகள் ஆணை யாளர் நாடாளுமன்றத்தில். தனது சத்தியப் பிரமாணத்தை எடுப்பதற்காக குட்டிமணி சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டார் என 1982 ஒக்டோபர் 16 ஆம் திகதி அறிவித்தார்.

குட்டிமணி மரண தண்டணை தீர்ப்பின்கீழ் இருந்தபோது அவரது.நியமனம் வர்த்தமானி யில். வெளியிடப்பட்டது காலியாகவிருந்த பாராளுமன்ற இருக்கைக்குக் குட்டிமணியை நியமித்தமைக்கான காரணத்தை விளக்குவ தற்காக வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தமிழர் ஜக்கிய விடுதலை முன்னணி முக்கிய ஸ்தர்கள் ஐந்து காரணங்களை உள்ளடக் கினர்.அவற்றுள் இரண்டு மிக முக்கிய மானவையாகும்:

(1) குட்டிமணியின் பெயர் நியமனமானதுஇ பொலிஸ் மற்றும் இராணுவதினர் அடங்கிய நிறுவனங்கள். மூலம் குறிப்பாக நாட்டின் தமிழ் இளைஞர்கள்மீது காலத்திற்குக் காலம் இழைக்கப்படும் அரச பயங்கரவாதத்திற்கு எதிரான ஓர் அடையாள எதிர்ப்பாகும்.

(2) அது குட்டிமணி மற்றும் ஜெகன்ஆகியோர் மீது. விதிக்கப்பட்ட. மரண. தண்டனைக்கு எதிரான ஓர் எதிர்ப்பாகும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றவாளியாக காணப்பட்டதையடுத்து மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டிருந்த குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வ ராஜா யோகச்சந்திரன்1983 பெப்ரவரி 4 ஆம் திகதி ஜனாதிபதி ஜயவர்தனவினால் பொது. மன்னிப் பின் கீழ் குட்டிமணியின் மரண தண்டனை ஆயுட் தண்டனையாகமாற் றப்பட்டது. . இதன் பின்னர் குட்டிமணி தான் பெயர் நியமனம் செய்யப்பட்ட தனது வட்டுக்கோட்டை ஆசனத்தை இராஜிநாமாச் செய்தார்.

1983ஆம்_ஆண்டின்_இனவழிப்பு

1983ம் ஆண்டு ஆடி மாதம் முன்னாள் அதிபர் ஜே. ஆர். ஜயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தில் (இனப் படுகொலையில்) ஏற்பட்ட இழப்புக்கள் பாதிப்புக்கள்இ கொடூரக் கொலைகள் பற்றி அதிகம் எழுதவேண்டியதில்லை. இது வரலா ற்றில் அழிக்கமுடியாத. ஒரு. கரும்புள்ளி என்பதை யாவரும். அறிவர் எனினும் சில விடயங்களை மட்டும் இங்கே. குறிப்பிட வேண்டியது தவிர்க்க முடியாததாகும.;

குட்டிமணிஇ தங்கத்துரை ஜெகனுக்கு எதிராக மேல்நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை தீர்ப் பளித்ததைத் தொடர்ந்து அந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யப் பட்டு மேன்முறையீட்டு விளக்கத்திற்காக காத்திருந்த. வேளையில் யூலை 23 அன்று திருநெல்வேலி தபால் பெட்டி. சந்தியில் புலிகள் நடத்திய கண்ணி வெடித்தாக்கு தலில்13இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இலங்கை அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டி ருந்த ஆயுதப். போராட்டத்தில் சிறிய சிறிய தாக்குதல்கள் இடம்பெற்றுவந்த அந்தக் கால கட்டத்தில் ஒரே தாக்குதலில் 13 இராணுவத் தினர் கொல்லப்பட்டனர் இந்தத் தாக்கதல்கள் அரசுக்கும் இராணுவத்தினருக்கும் பேரிடியாக அமைந்தது.

 இறந்த இராணுவத்தினருடைய உடல்களை வழமைபோன்று அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பாமல் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற காரணத்தைக் காட்டி பொரளைக் மயானத்தில் உடல்களைஅடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது

ஜே_ஆரின்_பரப்புரை

1983ம்ஆண்டுயூலை மாதம்24ம் திகதிமாலை தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி வரை அந்தப் பன்னிரண்டு தினங்களும் கொழும்பு மாநகரையும் அதன் சுற்றுப்புற நகரத்தையும் மற்றும் இலங்கைத் தீவின் ஏயைபாகங்க ளயும் உலுக்கிய கறுப்பு யூலை படுகொலை யின் 37 ஆண்டுகள்
நிறைவடைகின்றன.

கடந்த ஐம்பது வருடகால இன முரண்பாடு களின் உச்சக்கட்ட உணர்வுகள் கறுப்பு யூலை 'என அழைக்கப்படும் அளவுக்கு வரலாற்றுக் கறைபடிந்த அத்தியாயங்கள்கொண்டதாகும்.

மறுநாள் 1983ம் ஆண்டு யூலை மாதம் 24ஆம் திகதி. தொலைக்காட்சியிலும்இ. வானொலி யிலும் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் சிங்கள பௌத்தர்கள். (இராணுவத்தினரை ) பதின் மூன்று பேரைக். கொன்றுவிட்டார்கள் என்ற ஜே.ஆரின் பரப்புரையையடுத்து கொழும்பு மாநகரிலும்; அதன் சுற்றுப்புற நகரங்களிலும் மற்றும் இலங்கைத் தீவின் ஏயை பாகங்களி லும் இனக்கலவரம் என்ற பெயரில் இனப்படு கொலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன

இந்த வேளையில் இலண்டனிலிருந்து வெளி வரும் (டுழனெழn வுநடநபசயிh). இலண்டன் ரெலி கிராப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் பின்வருமாறு ஜே.ஆர் பேட்டி கொடுத்தார்.

'நான் தமிழ் மக்களது கருத்துக்களைப்பற்றி அக்கறைப்படப் போவதில்லை. அவர்களது உயிர்களைப் பற்றியோ உடமைகளைப் பற்றியோ நான் கவலைப்படப்போவதில்லை'. இந்தப் பேட்டி கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் என்ற (னுயடைல நேறள)டுயமெயனநநிய ( ஆங்கிலத் தினசரியிலும் ' லங்காதீப' போன்ற சிங்கள செய்தித் தாள்களிலும் பிரசுரம் செய்யப்பட்டன. சிங்கள பௌத்த பேரினவாதிகள் உசுப்பேற்றப்பட்டனர். ஊக்கப்படுத்தப் பட்டனர். அதனையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் காட்டுத் தீ போல கலவரமும் இனப்படுகொலையும்; நடந்தேறத்தொடங்கின

இந்தக் காலகட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நாட்டின் பல சிறைச்சாலைகளிலும் இராணுவ முகாம் களிலும் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் பல அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப் பட்டி ரு ந்தனர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த பல அரசியல் கைதிகள் சார்பாக உயர் நீதி மன்றத்தில் கைதும் தடுத்துவைப்பும் சட்ட ரீதி யற்றவையென அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குக்கள் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் விசாரணைகளில்இருந்த வேளை யிலேயே யூலை மாதம். 24ஆம் திகதி இந்த இனக்கலவரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

53 அரசியல் கைதிகள்இபடுகொலை

1979ம் ஆண்டுபயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப் பட்டிருந்தவர்களில் வெலிகடை சிறைச்சாலையில். வணபிதா சிங்கராசா வணபிதா ஜெயதிலகராசா வண பிதா சின்னையா வவுனியா காந்திய இயக்கத் தலைவர் டேவிட் ஐயா. கலாநிதி இராஜசுந்தரம் பத்திரிகை ஆசிரியர் கோவை மகேசன் வைத்தியகலாநிதி ஜெயகுலராசா யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் முதலான 

சமய. சமூகப் பெரியார்களும்புத்தி ஜீவிகளும் தங்கத்துரை தளபதி குட்டிமணி ஜெகன் தேவன் நடேசுதாஸ் சிவபாதம் குமார் ஸ்ரீகுமார்.  மரியாம்பிள்ளை குமர குலசிங்கம் போன்ற முன்னணிப் போராளி கள் உட்பட. ஐம்பத்தி மூன்று உயிர்கள்1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் தொடங்கி யதைத் தொடர்ந்து அதிக. பாதுகாப்பைக் கொண்ட வெலிக்கடைச் சிறை ச்சாலையில் ஆடி மாதம் 25 27ஆம். திகதிகளில். 53 கைதிகள்இ குட்டிமணிஇ தங்கத்துரை ஜெகன் உட்பட படுகொலை செய்யப்பட்டனர்.

சட்டரீதியற்ற கொலைகள்_1983

நாட்டில் ஏற்பட்ட தமிழருக்கு எதிரான 1983 ஆம் ஆண்டு இன அழிப்பின் போது சிங்கள கும்பல்களும் இலங்கை ஆயுதப் படைகளைச் சேர்ந்த ஆட்களும்; தமிழ். ஆண்களையும் சிறுவர்களையும் சித்திரவதை செய்து கொலை செய்தும் தமிழ் பெண்களையும் சிறுமிகளையும் வன்புணர்வு செய்தும் வதை செய்தும். கொலை செய்தும் 

தமிழர் வீடுகளையும் வியாபார. நிலையங்களையும்; சூறையாடியும் தீயிட்டுக் கொளுத்தியும் தமிழ் பகுதிகளில் பெரும் அட்டகாசம் புரிந்தனர். பொலிசாரும் இராணுவத்தினரும் (பெரும்பாலும் சிங்களவர்களாக இருந்தனர்) தமிழருக்கெதிரான இவ்வன்முறை அட்டகா சத்தில் பங்குபற்றினார்கள் அல்லது கண்டும் காணாதிருந்தனர்.

இன அழிப்பின் இரண்டாம் நாளான ஜூலை 25 ஆம் திகதி கொடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் எவ்வித விசாரணை யுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலி க்கடை சிறைச்சாலையின் தழிழ் கைதிகள் சிறைக் காவலர்களின் உதவியோடு சிங்கள கைதிகளினால் மிருகத்தனமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் கூற்றுப்படி சிங்கள கைதிகளுள் சிலருக்கு மது வழங்கப் பட்டு தமிழ் கைதிகளை தாக்குமாறு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். பெரும் எண்ணிக்கையிலான சிங்கள கைதி கள் கத்திகளோடும் வேறு. கூரியஆயுதங்க ளோடும் 35 – 37 தமிழ் கைதிகள் தங்கியிரு ந்த கட்டிடத்தினுள் நுழைந்தனர். அவர்கள் தமிழ் கைதிகளை கத்தியால் குத்தினர்; அடித்தனர்; சித்திரவதை செய்தனர். ஒரு சில கைதிகளின் பிறப்புறுப்புகள் வெட்டிச் சிதைக்கப்பட்டன.

குட்டிமணி மற்றும் ஜெகன் ஆகிய இருவரதும் கண்கள் இரும்புக். கம்பிகள். கொண்டு அடித்துச் சிதைக்கப்பட்டதோடு அவர் தனது தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்குப் பின்னர் சுதந்திர தமிழ் அரசு ஒன்றை தனது கண்களினால் இன்னொரு மனிதர் ஊடாக பார்ப்பதற்கு கணவுகண்டமையினால் அவை தோண்டி எடுக்கப்பட்டன. தாக்குதல்தாரி ஒருவரினால் குட்டிமணியின் நாக்கு வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அந்நபர் இரத்தத்தைக் குடித்து ' புலி_ஒன்றின் சூஇரத்தத்தை_நான்_குடித்துவிட்டேன்' என்று கூச்சலி ட்டதாகவும் இன்னொரு கதை கூறுகிறது.

அதன்பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் சிறைச்சாலை முற்றத்தில் இருந்த ஒரு புத்தர் சிலைக்கு முன்னே போடப்பட்டது.

1983 ஜூலை 25 ஆம் திகதி. குட்டிமணியின் மேன்முறையீடு நிலுவையிலிருந்த போது குட்டிமணி வெளிக்கடை சிறைச்சாலை வளாகத்தினுள் கொல்லப்பட்டார்.

வெலிக்கடைச் சிறையில் வெட்டிக் குதறி கொலை செய்யப்பட்ட தமிழ்க் கைதிகளது உடல்கள் வெலிக்கடைச். சிறைச்சாலை வாயினுள் காட்சிப்படுத்தப்பட்டன

சட்ட நூலகத்தின் காரியதரிசி கணேசன் கொலை

கொழும்பில் வசித்த பல சட்டத்தரணிகளின் அசையும் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டது மட்டுமின்றி கொழும்பு நீதிமன்றில் உள்ள சட்ட நூலகத்தில் காரிய தரிசியாக செயலாற்றிய அமைதியான சுபாவம் கொண்ட தமிழ்ச்; சட்டத்தரணியான கணேசன். நீதிமன்றிலிருந்து வீடு செல்லும் வழியில் ராஜகிரியவில் வைத்து காடையர் களால் வெறித்தனமாக கொலை செய்யப்பட்டார்.

அரசியல்கைதிகளின் சார்பில்வழக்குக்களில் ஆஜராகி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி யின தலைவரும். மூத்த. சட்டத்தரணியுமான முருகேசு.சிவசிதம்பரம்இ மருதானை நொரிஸ் கனல் வீதியில் இலக்கம் 100 என்ற வீட்டிலேயே. வசிந்து வந்தார்.; 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் சிவசிதம்பரம் அவர்கள் வசித்து வந்த மருதானையுள்ள அவரது வீடு காடையர்களால் முற்றாக எரித்து அழித்து சாம்பல் ஆக்கப்;பட்டது.

அந்த வீதியால் செல்லும்; நேரங்களில் அந்த 100ஆம் இலக்கத்தை பார்க்க நான் தவறு வதில்லை. தற்பொழுது அந்த வீடு இருந்த இடம் வர்த்தக ஸ்தாபனமாக மாற்றப்பட்டிருந் தாலும் அந்த நாட்களின் ஞாபகங்கள் மனத் திரையில் வந்து செல்வதுண்டு.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஆஜராகிய பல சட்டத்தரணிகளின் வசிப்பிடங்கள் குறிவைக் கப்பட்டுத் தாக்கப்பட்டன. அந்தக் கால கட்ட த்தில் குட்டிமணியின் சட்டத்தரணிகள் என்று அடையாளப் படுத்தப்பட்டிருந்தோம்.

இனப்படுகொலையின்_சூத்திரதாரிகள் சூயார்

1983ம் ஆண்டு கறுப்பு யூலை கலவரத்திற்கு யார் காரணம் என்று பலதரப்பினரிடம் இருந் தும் ஒரு ஆய்வை இந்தியாவிலிருந்து வெளி வரும் 'இலஸ்றேட்டட். வீக்லி. ஒவ் இந்தியா' என்ற. சஞ்சிகை நடாத்தியது. ஜே.ஆரின் மந்திரி சபையில் இராஜாங்க அமைச்ச ராக விருந்த ஆனந்த திஸ்ஸ டி. அல்விஸ் என்பவர் (முன்னைய சபாநாயகம்) இக்கலவரத்திற்கு ரஸ்ய. உளவு ஸ்தாபனமான கே.பி.ஜியின் சர்வதேச சதி எனக் குற்றம் சாட்டினார். 

இதே மந்திரி சபையில் கைத்தொழில் விஞ்ஞான அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ என்பவர்இ இக்கலவரங்களுக்கு இந்தியா மீதும் இந்திய உளவு ஸ்தாபனமாக 'றோ' மீதும் குற்றம் சாட்டினார்.இதேஅமைச்சரவையில் கால்நடை அபிவிருத்தி. அமைச்சராகவிருந்த. எஸ். தொண்டமான் இலங்கை மக்கள்தான் இனக் கலவரத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டி னார். 

அக்காலத்தில் குருநாகல் மறமாவட்ட பேராயர் அதி.வண .லக்ஸ்மன் விக்கிரம சிங்கா சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்க ளுக்கு எதிராக வளர்த்து வந்த குரோதமே காரணம் எனக் குறிப்பிட்டார். அரசுத்தலைவர் ஜே.ஆர். இக்கலவரங்களுக்கு. இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சிஇ நவ சமசாசக் கட்சிஇ ஜே.வி.பி ஆகிய மூன்று கட்சிகளுமே காரணம் எனக் குறிப்பிட்டார்

முன்னாள் பிரதம நீதியரசர் சர்வானந்தா தலைமையில் விசாரணை குழு

இவ்வாறாக 1983 இனப்படுகொலை தொடர் பானதடயங்கள்இ சான்றுகள்இ ஆதாரங்கள் யாவும் மறைக்கப்பட்டுவிட்டன. இவை தொடர் பாக எந்தவொரு விசாரணைக்குழுவும் 1983 காலப்பகுதியைத் தொடர்ந்து அமைக்கப்பட வில்லை. 1994இல் சந்திரிக்கா. குமாரதுங்க ஜனாதிபதியாகிய பின் முன்னாள் பிரதம நீதியரசர் சுப்பையா சர்வானந்தா தலைமை யில் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்ட றிவதற்கான குழுவும்எந்த உண்மைகளையும் கண்டறியவில்லை.

இனக்கலவரத்திற்கு. காரணமாகயிருந்தது மட்டுமின்றி யுத்தம் என்றால். யுத்தம் சமா தானம் என்றால் சமாதானம் என்று அறிக்கை விட்ட ஜயவர்தனா இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான இந்த இனக்கலவரத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர. எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்த தன் மூலம் மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறை புரிந்தவராவார்;.

மேலும் மக்கள் முன் தோன்றி உரையாற்றும் பொழுது இத்தனைக்கும் காரணம் எல்;ரீரீஈ இராணுவத்தினரை கொன்றதால் சிங்கள வர்கள் கொதிப்படைந்து இருக்கின்றார்கள்; தனி. தேசம் கேட்டு இனி யாரும் இங்கே போராட்டம் நடாத்தக் கூடாது அதற்கு ஏற்றாற் போல் அரசியலமைப்புச் சட்டத்தை நான் மாற்றியமைக்கப் போகின்றேன்.

இக்கால கட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் களில் அநேகமானோர் சட்டத்தரணிகளாக இருந்தபோதிலும் பயங்கரவாதஇ அவசரகாலச் சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் வழக்குக்களின் விசாரணை கள் கொழும்பிலேயே; நடைபெற்றதாலும் கொழும்பை தமது வதிவிடங்களாக கொண் டிருந்த சட்டத்தரணிகளால் மட்டுமே அரசியல் கைதிகளின் வழக்குகளில் ஆஜராகிவாதா டும் சூழ்நிலை காணப்பட்டது

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஆஜராகிய பல சட் டத்தரணிகளின் வசிப்பிடங்கள் குறிவைக்கப் பட்டுத் தாக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் குட்டிமணியின் சட்டத்தரணிகள் என்று அடை யாளப் படுத்தப்பட்டிருந்தோம்.

சூராஜகிரிய_முகாமில்_அடைக்கலம்

நானும். எனது மனைவியும் வசித்த வீடு தாக் கப்பட்டதைத் தொடர்ந்துபல இன்னல்களுக்கு மத்தியில் உடமைகளை இழந்த நிலையில் 15 நாட்கள் ராஜகிரியவில் அமைக்கப்பட்டிருந் முகாமில் தங்கினோம் சிறிது நாட்களின் பின்னர் மாற்றுத். துணி.கூட. இல்லாத நிலை யில் பல கசப்பான வேதணை மிக்க அனுபவ ங்களைச் சுமந்து கொண்டு பின்னர் எனது ஊரான புங்குடுதீவிற்குச் சென்றடைந்தோம்

சூதாய்மண்_நோக்கி_பயணம்

இனக்கலவரம் காலத்திற்கு காலம் ஏற்படுவ தும் அதனால் ஏற்படத்தப்படும் விளவுக ளைச் சந்திப்பதும் அதனைத். தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்வதும் என்னைப் பொறுத்த வரையில் மிகவும் பழக்கப் பட்டதாகும் ஏனெ னில்1958ஆம் ஆண்டு. 1977ஆம். ஆண்டு மீண்டும் 1981ஆம் ஆண்டு இறுதியாக 1983ஆம் ஆண்டுவரை இரண்டுமுறை கப்பலிழும் இரண்டு முறை தரைமார்கமா கவும் சொந்த மண்ணை நோக்கி சென்றமை நினைவிலிருந்து அழியாத நினைவுகளே?

0/Post a Comment/Comments

Previous Post Next Post