மாமனிதர் ரவிராஜ்ஜின் தியாகத்தை நான் மதிக்கின்றேன்.ஆனால் அவரது மரணத்தினையடுத்து அவரது மனைவியை அழைத்து கூட்டமைப்பு அரசியல் அந்தஸ்த்தை வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு வழங்க தயாராக இல்லாத கூட்டமைப்பு தற்போது தமது தோல்வி பயத்தில் மாமனிதர் தியாகத்தை விற்பனை செய்ய முற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் வாசுகி.
இதற்கேதுவாகவே மாமனிதர் ரவிராஜின் மனைவியை தேர்தல் களமிறக்கியுள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரது கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
கூட்டமைப்பு மாமனிதர் ஒருவரது மனைவியினை களமிறக்கியுள்ளது.அதே போல கூட்டணி காணாமல் ஆக்கப்பட்ட போராளியொருவரது மனைவியை களமிறக்கியுள்ளது.
இந்நிலையில் முன்னணி எவ்வாறு மகளிரது வாக்குகளை பெறமுடியுமென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
எனது வாழ்வியலின் பெரும் பகுதியை வன்னியில் செலவிட்டுள்ளேன்.
குறிப்பாக யுத்த காலத்திலும் அதன் பின்னராகவும் வன்னி மக்களிடையே ஆற்றுப்படுத்தலை முன்னெடுத்திருந்ததாக தெரிவித்த அவர் மக்களது தெரிவு ஓய்வு ஒழிச்சலின்றி மக்கள் சேவையாற்றும் எனக்காகவே இருக்குமென தெரிவித்தார்.
Post a Comment