தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெற்ற மறுநாளே நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் அத்துடன் எமக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க என்னால் முடியவில்லை என்றாலும் அடுத்த நாளே அரசியலில் இருந்து விலகி விடுவேன் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நான் முழு நேர அரசியல்வாதியாக இருக்க விரும்பவில்லை.மாறாக தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்கவே அரசியலுக்குள் வந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் எனும் தொனிப்பொருளில் கருத்தாடல் நிகழ்வு இன்று நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
நாட்டின் புதிய ஜனாதிபதியாக வந்துள்ள கோத்தபாய ராஜபக்சவும் தனது உரையில் புதிய அரசியலமைப்பு ஒன்று தேவையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.அவரது அந்த உரையை வைத்தே நான் தற்போதைய அரசுக்கு தேவையான நேரங்களில் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக கூறியிருந்தேன்.அதாவது எமது நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு எமது விடயங்களும் உள்ளடக்கப்பட்டால் அவர்களுடன் இணைந்து செயற்பட நாம் தயாராகவே இருக்கின்றோம்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இனப் பிரச்சனைக்கு தீர்வாக புதிய அரசியலமிப்பு உருவாக்கம் இடம்பெற்றது.அதன் பயனாக இடைக்கால வரைபும் வெளியாகியது. எனினும் அது தற்போது தடைப்பட்ட நிலையில் உள்ளது.தற்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை நிறைவேற்றாது என்பதற்காக நாம் எடுத்த முயற்சிகளில் இருந்து பின்வாங்க முடியாது.ஏனெனில் நாம் நீண்ட முயற்சியால் பெற்ற இடைக்கால வரைபினை இல்லாமல் செய்ய நாம் இடமளிக்க முடியாது.
நாட்டில் தற்போது தேர்தல் சூழ்நிலை காணப்படுகின்றது.இந்த சந்தர்ப்பத்தில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் தமிழர்கள கேட்கும் தீர்வினை வழங்க மாட்டோம் என அரச தரப்பினர் கூறிவருகின்றனர்.ஆனால் தேர்தலின் பின்னர் அவர் மனங்களில் மாற்றம் ஏற்படலாம்.அவ்வாறு மாற்றம் ஏற்படாலமும் போகலாம்.
ஏனென்றால் நாம் இப்போது கடுமையான சூழ்நிலைக்குள் இருந்து கொண்டிருக்கின்றோம்.அதற்களாக இத்தனை நாட்களாக கஷ்டப்பட்டு பெற்றுக்கொண்டதை இழக்க முடியாது. அவர்களுக்கு எம்மால் சில தேவைகள் ஏற்படக் கூடும்.அப்போது சந்தர்ப்பத்தை நாம் முழுமையாக பயன்படுத்துவோம்.
தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு ஓர் தீர்வித்திட்டத்தை கொண்டுவந்தால் அதனை சிங்கள மக்கள் எதிர்க்க மாட்டார்கள்.அதேபோல தர்போப்து இரு அணிகளாக பிரிந்துள்ள சஜித்இரணில் தரப்புக்கள் எதிர்க்கட்சியினராக வந்தாலும் அவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.
ஏனெனில் இடைக்கால வரைபினை உருவக்குவதிபில் அவர்களின் பங்கும் உள்ளது.எல்லாவர்ர்ருக்கும் மேலாக தற்போதைய ஆளும் தரப்பினரின் ஆதரவுடனேயே இடைக்கால வரைபு அன்றைய காலத்தில் வெளியில் வந்தது.எனவே எமக்கு நம்பிகை உள்ளது.
அவ்வாறு தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை என்னால் பெற்றுக்கொடுக்க முடியாது போனால் மறுநாளே நான் அரசியலில் இருந்து விலகிவிடுவேன்.அதேபோல தீர்வினை பெர்ருக்கொடுத்தாலும் நான் அரசியலில் இருந்து விலகிவிடுவேன்.
ஏனெனில் நான் தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றே அரசியலுக்கு வந்தேன்.மாறாக முழு நேர அரசியல் செய்ய அரசியலுக்குள் வரவில்லை என்றார்.
Post a Comment