இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் இவ்வாறு நுழைபவர்கள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன்
மக்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க தவறினால் அது யாழ்.மாவட்டத்திற்கு பேராபத்தை உண்டாக்கும் சாத்தியங்கள் உள்ளது. எனவே மக்கள் இந்த விடயத்தில் மிக அவதானமாக இருக்கவேண்டியது கட்டாயம் எனவும் கூறியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்இ யாழ்.மாவட்டத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 14 பேர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் சுகாதாரதுறையினர் மற்றும் பொதுமக்களின் அயராத முயற்சியினால் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில் இப்போது இலங்கையில் 2ம் அலை சமூக தொற்காக மாறும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில் யாழ்.மாவட்டம் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது அத்தியாவசியமானது. மக்கள் சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றுவதுடன்இ அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும்
வெளியில் நடமாடுங்கள். சமூக இடைவெளியை இறுக்கமாக பேணுங்கள். மேலும் யாழ்.மாவட்டத்திற்கு பேராபத்தை உண்டாக்க கூடிய சம்பவம் அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்றது.
அதாவது இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் குறிப்பாக யாழ்.மாவட்டத்திற்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இறுதியாக கூட 4 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது.
சட்டவிரோதமாக நுழைகிறவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக கிராமசேவகர் ஊடாக சுகாதார துறையினருக்கு அறியப்படுத்துங்கள். அதனை செய்யாவிட்டால் யாழ்.மாவட்டம் பேராபத்தை சந்திப்பதற்கான ஆபத்துக்கள் உள்ளது.
Post a Comment