பகிரங்க விவாதத்திற்கு எங்களது கட்சியும் தயார் எனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வேட்பாளருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் அவ்வாறாக விவாதிப்பது தேவையற்றது என்றும் அதில் எந்தப் பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் ஊடகங்களைச் சந்தித்து கலந்துரையாடியிரந்தார். இதன் போது பகிரங்க விவாதம் குறித்து எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர் உடனடியாகவே எமது கட்சியின் வேட்பாளர் சிறீகாந்த தான் விவாதம் செய்ய தயார் என்று கூறியுள்ளார்.
என்னைப் பொறுத்தவரையில் வாதிட்டுக் கொண்டிருப்பது என்பது தேவையற்ற விடயம். மக்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய நன்மைகளை செய்ய வேண்டுமே தவிர தேவையில்லாமல் இருந்து விவாதித்துக் கொண்டிருப்பதால் அல்லது பேசிக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை.
அறிவில் இருந்து கொண்டு விளையாட்டுக்களை விளையாடுபவர்களுக்கு நல்லது. மக்களுக்கு என்ன நன்மை என்றுதான் பார்க்க வேண்டும். நீங்கள் சவால் விட்டதால் எமது சார்பில் சிறீகாந்தா விவாதத்திற்கு தயாராக உள்ளார் என்றார்.
Post a Comment