திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் காணி தொடர்பான வழக்கு இன்று திருகோணமலையில் உள்ள மாகாண மேல்நீதி மன்றத்திலே நிதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் வழக்காளியும் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளருமாகிய கோகிலரமணி அம்மா சார்பில் வழக்கறிஞரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம.ஏ. சுமந்திரன் ஆஜராகி இருந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..
கhலை 10.40 முதல் 12.30 வரை இடம்பெற்ற வழக்க விசாரனையில் அரச தரப்பிலே இன்றைய தினம் முன்னெடுத்த வாதமானது.இது புராதண பொக்கிசம் சம்மந்தப்பட்ட விடயம் என்பதனால் தேசிய புராதண பெக்கிசம் என்பதனால் மாகாண மேல் நீதி மன்றத்திற்கு நியாயதிக்கம் இல்லை என்றும் கொழும்பில் உள்ள மேல் முறையீட்டு நீதி மன்றத்திலே தாக்கல் செய்திருக்க வேண்டும்.என்றும் வாதிட்டனர்.
ஏற்கனவே இந்த வாதம் நீதி மன்றத்தின் முன் வைக்கப்பட்டு இந்த வாதம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் இடைக்கால உத்தரவு சம்பந்தமாக நாங்கள் வாதிட்ட போது எப்படியாக மாகாண மேல் நீதி மன்றத்திற்கு நியாதிக்கம் கிடைத்திருக்கின்றது என நான் வாதிட்டு இருந்தேன்.
அதை மேல் நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு இந்த வழக்கை தொடர்ந்து நடாத்தி இருக்கின்றது. மேல் நீதி மன்றத்திற்கு எதிராக எந்த முறையீடுகளும் அரச தரப்பு செய்திருக்க வில்லை எனவே ஏற்கனவே அமுலில் இருக்கும் உத்தரவை மாற்ற முடியாது என்பதே என்னுடைய வாதமாக இருந்தது.
இந்த இரண்டு வாதத்தையும் நீதி மன்றம் முழுமையாக கேட்டுக்கொண்டு எழுத்து மூலமான சமர்ப்பனங்களுக்காக செப்டம்பர் மாதம் 15ம் திகதிக்கு வழக்கு தவனை குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான எழுத்து மூல சமர்ப்பணங்களை நீதிமன்றம் ஏற்றதன் பின்னர்.இறுதித் தீர்மானம் ஒன்றை நீதி மன்றம் கொடுக்கும்.என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
Post a Comment