தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரை சொல்லுவதற்கே ஜனநாயக போராளிகள் அமைப்பினருக்கு எந்த அருகதையும் கிடையாது என்று புலிகள் இயக்கத்தின் பல்வேறு உயர் பொறுப்புக்களை வகித்தவரும், தற்போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ரூபன் தெரிவித்தார்.
புலிகள் ஒரு போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளவும் இல்லை அவர்ளை தூக்கிப்பிடிக்கவும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் ஊடகவியலாளர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வோட்பாளர்கள் கலந்து கொண்ட சந்திப்பு நடந்தது.
இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் ரூபானிடம் ஜனநாய போராளிகள் என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள் அந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அடையாளப்பட்ட நபர்களாக இருந்தார்களா? அல்லது புலிகள் சார்ந்த சில தீர்மானங்களையாவது எடுத்துக் கொள்ளக் கூடிய நிலையில் இருந்தார்களா? என்று ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளாக இருந்தார்கள்.
நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தேன். இதன் பின் 1995 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றியிருந்தேன்.
பின்னரும் 2001 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டுவரை திருகோணமலை மாவட்டத்தில் அரசியல் துறை பொறுப்பாளராக கடமையாற்றியிருந்தேன்.
1996 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரை தமிழீழு பொருமியம் மேம்பாட்டு நிறுவனத்திற்கு வட,கிழக்கு மாகாணங்களின் பொறுப்பாளராக இருந்துள்ளேன்.
2005 ஆம் ஆண்டில் இருந்து இறுதி யுத்தம்வரை குறிப்பாக முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படும்வரைக்கும் தலைமைச் செயலகத்திற்கு பொறுப்பாக இருந்தேன்.
நான் தலைமைச் செயலகத்தில் இருந்ததால் அனைத்து புலிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஏதோ ஒரு கட்டத்தில் அனைத்து போராளிகளின் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வகையில் இப்போது ஜனநாயக போராளிகள் என்று சொல்லிக் கொண்டு வந்துள்ள துளசி, கதிர் என்பவர்கள் விடுதலைப் புலிகள் வெளிப்படையான செயற்பாட்டில் இருந்த போது பெயர் தெரியாதவர்களாகத்தான் இருந்தார்கள்.
தமிழ்செல்வன் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தார். அவருடைய கையாட்களாக, அங்கும் இங்கும் முகாங்கம் பராமரிப்பாளர்களாக அவர்கள் இருதார்களே தவிர, உருப்படியான எந்த வேலையையும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் செய்திருக்கவில்லை.
இவர்கள் இனந்தெரியாதவர்களாகத்தான் புலிகள் இயக்கத்தில் இருந்தார்கள். சிங்கள கட்சிகள் கட்சிகள் மட்டுமல்ல பலரிடம் இவர்கள் பணம் பெற்றுள்ளார்கள். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. தேவை ஏற்படுமாக இருந்தால் அந்த ஆதாரங்களை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன்.
நான் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த போது இவ்வாறான பொறுப்புக்களில் இருந்தேன் என்று அடுக்கடுக்காக சொல்லியது போன்று, ஜனநாயக போராளிகள் கட்சியினரால் சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர்கள் புலிகள் இயக்கத்தில் எந்த பயனுள்ள விடயங்களையும் செய்யாமல், இனந்தெரியாதவர்களாகவே இந்தார்கள்.
நீங்கள் புலிகள் இயக்கத்தில் எவ்வாறான பணிகளில் இருந்தீர்கள் என்று ஜனநாயக போராளிகள் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களிடம் கேட்டால், தமிழ் செல்வனுக்கு பின்னால் நின்றோம் என்று சொல்வார்களே தவிர, வேறு ஒன்றையும் அவர்களால் சொல்ல முடியாது. சொல்லவும் அவர்களிடம் ஒன்றும் இல்லை.
இவ்வாறானவர்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வக்களாத்து வாங்குவது வாங்கி, அந்த கட்சியை பொறுப்பெடுப்போம் என்று சொல்லுகின்ற அளவிற்கு தங்களுடைய மனநிலையை வளர்த்து வைத்துள்ளார்கள் என்று சொன்னால் அவர்கள் மனநோயாளரிகளாகத்தான் இருக்க வேண்டும்.
இவ்வாறானவர்கள்தான் பாதாளத்தில் விழுந்து கிடக்கும் சம்மந்தரை தூக்கிவிட முயட்சிக்கின்றார்கள். இதனால் எந்த பயனும் இல்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்துள்ளார்கள்.
ஜனநாயக போராளிகள் அமைப்பு நிலை கொண்டுள்ள திருகோணமலை மாவட்டத்தில் 1977 ஆம் ஆண்டடில் இருந்து 2020 ஆம் ஆண்டுவரைக்கும் சமந்தர்தான் பெருமளவான தமிழர் பூர்வீக நிலங்களை பறி கொடுத்துள்ளார், தமிழர்களின் பெரும்பான்மை இழப்பதற்கும் காரணமாக உள்ளார்.
அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக சம்மந்தர் தெரிவு செய்யப்பட்ட பின் கொழும்பிற்கு சென்று தங்கிவிடுவார். அல்லது இந்தியாவிற்கு சென்றுவிடுவார். திருகோணமலை மாவட்டத்தில் என்ன நடக்கின்றது என்பதே சமம்மந்தருக்கு தெரியாது.
அந்த மாவட்டத்தில் தமிழர்களின் நிலங்களும், பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் பறிக்கப்பட்டமை அரசின் திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம். அதற்கு சம்மந்தரும் உடந்தையாக இருந்திருக்கலாம். இது எனது ஊகம் இல்லை. நியமானவை.
போராளிகள் அமைப்பு என்று சொல்லிக் கொண்டு வருபவர்கள் தாங்கள் விடுதலைப் புலிகள் என்று சொல்வதற்கு எந்த அறுகதையும் இல்லை. கோத்தபாயவுடனும், மஹிந்தவுடனும், சம்மந்தனுடனும் நிற்கும் இவர்கள் யாரை தலைமை என்று கூறுகின்றார்கள் என்று தெரியவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளுகின்றோம், அந்த கட்சியை தூக்கிப்பிடிக்கின்றோம் என்று எந்த காலத்திலும் சொல்லவில்லை என்றார்.
Post a Comment