முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்தை கயேந்திரனுக்கு வழங்க கட்சி தீர்மானம்? - Yarl Voice முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்தை கயேந்திரனுக்கு வழங்க கட்சி தீர்மானம்? - Yarl Voice

முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்தை கயேந்திரனுக்கு வழங்க கட்சி தீர்மானம்?


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனம் அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கயேந்திரனுக்கு வழங்குவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு யாழில் ஒரு ஆசம் கிடைக்கப்பெற்றது. 

அதே நேரம் வடக்கு கிழக்கு முழுவதும் கட்சி போட்டியிட்ட நிலையில் அக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

 இந்த தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஆராயும் கூடு;டமொன்று கட்சி உயர் பீடத்தில் நடைபெற்றிருந்தது.

இதன் போது அந்த தேசியப்பட்டியல் ஆசனத்தை கட்சியின் பொதுச் செயலாளருக்கு வழங்குவதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post