இந்தியாவின் உதவியில் முல்லைத்தீவில் பொது நூலகம் கலாசர மண்டபம் அமைப்பது குறித்து ஆராய்வு - Yarl Voice இந்தியாவின் உதவியில் முல்லைத்தீவில் பொது நூலகம் கலாசர மண்டபம் அமைப்பது குறித்து ஆராய்வு - Yarl Voice

இந்தியாவின் உதவியில் முல்லைத்தீவில் பொது நூலகம் கலாசர மண்டபம் அமைப்பது குறித்து ஆராய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தியத் தூதரகத்தின் நிதிப் பங்களிப்பில் பொது நூலகம் மற்றும் கலாச்சார மண்டபம் என்பன அமைக்கப்படுவது தொடர்பில் தூதரக அதிகாரிகள் நேரில் ஆராய்ந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நகரின் மத்துயில் உள்ள நீதிமன்றம் அருகில் பொது நூலகம் ஒன்று அமைக்கும் அதே நேரம் முள்ளியவளையில் ஓர் கலாச்சரா மண்டபமும் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அமைக்கப்படவுள்ள இரு பிரதான திட்டங்களிற்காகவும் 200 மில்லியன் ரூபா நிதியினை பங்களிக்க இந்தியத் தூதரகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இரு திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கடந்த வாரம் யாழில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் முல்லைத்தீவிற்கு பயணித்து இடங்களை பார்வையிட்டதோடு மாவட்டச் செயலகத்திலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறு இடம்பெற்ற கலந்தெரையாடலில் இரு திட்டத்திற்கும் இணக்கம் தெரிவித்த இந்திய அதிகாரிகள் திருகோணமலைக்கும் முல்லைத்தீவிற்குமான போக்குவரத்தினை இலகுவாக்கும் நோக்கில் புல்மோட்டையில் பாலம் அமைப்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டனர். இப் பபெதியில் 800 மீற்றர் நீளமான பாதை அமைக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post