இம்முறை தேர்தல் வாக்களிப்பின் போது பேனா பயன்படுத்த உள்ளால் வேட்பாளர்கள் தங்களுடைய பெயர் பொறித்த பேனாக்களை வாக்காளர்களிடம் விநியோகிக்கும் நடவடிக்கைகளை கைவிடுமாறும்
அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலின் முன்னேற்பாடுகள் தொடர்பில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதி நிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதி நிதிகள் தமது சந்தேகங்கள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் தெரிவித்தனர்.
இதன் போது கிளிநொச்சி மாவட்டத்தில் வேட்பாளர் ஒருவரால் தனது பெயர்இ விரும்பிலக்கம் என்பற்றை அச்சிடப்பட்ட பேனாவினை வாக்காளர்களிடம் விநியோகித்து வருகின்றார்.
மேலும் வாகன திறப்புக்களில் இணைக்கப்படும் கீரேக்கிலும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் விரும்பிலக்கங்கள் பொறிக்கப்பட்டு
விநியோகிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
நடந்து முடிந்த தபால் மூல வாக்களிப்பின் போது ஒருவர் கட்சி ஒன்றின் கீரொக்குடன் வந்த நிiயில்இ அலுவலகர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அந்த கீர்ரொக் வெளியில் வாக்களிக்கும் இடத்திற்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டிருந்தது என்பதையும் Rட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் மேற்படி கோரிக்கையினை விடுத்திருந்தார்.
வாக்களிக்க வருபவர்கள் கட்டாயமாக போனா அல்லது பென்சில் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. விரும்பியவர்கள் அதை கொண்டுவரலாம்.
ஆனால் கட்சி அல்லது வேட்பாளர்களின் பெயர்இ விருப்பிலக்கம் பொறிக்கப்பட்ட பேனாக்கள் கொண்டுவருவதை அனுமதிக்க முடியாது. முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமான விதிமுறைகாக கடைப்பிடிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment