அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது.
இதன் முதல் நிகழ்வாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக கே. திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னார்இ முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக கபில அத்துக்கொரல நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment