தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை தமிழரசுக் கட்சியின் தலைமைக்கே வழங்க வேண்டும். இதனைவிடுத்து வேறு ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பின் அந்த முடிவுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழரசுக் கட்சியின் யாழ் கிளை கோரியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளைக் கூட்டம் யாழ் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இக் கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளனார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு சிவஞர்னம் கருத்து வெளியிடுகையில்..
தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் போது கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட வேண்டுமென ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதே வேளை தேசியப்பட்டியல் குறித்து கட்சியில் தற்செயலாக் வேறு ஏதாவது தீர்மானம் எடுக்கப்பட்டால் அதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேசியப் பட்டியல் குறித்து பங்காளிக் கட்சிகளுடன் கலந்து பேசி இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென்றும் இன்றைய இக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சிக்கு கிடைத்துள்ள தேசிப்பட்டியல் ஆசனத்தை கட்சித் தலைவருக்கு வழங்க வேண்டுமென்று நாங்கள் கேட்டிருந்தோம். அது ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் மாற்றப்பட்டிருக்கலாம். ஆகையினால் அதனைப் பரிசீலனை செய்து கட்சித் தலைவருக்கே வழங்க வேண்டுமென்றே கோருகின்றோம் என்றார்
Post a Comment