யாழ்ப்பாணம் நல்லை ஆதீனக் குரு முதல்வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நல்லை ஆதினத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் சோகசுந்தர பராமாச்சாரிய சுவாமிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் சந்தித்தனர்.
இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன் போது ஆராய்ந்துள்ளனர்.
மேலும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment