ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வையே நாங்கள் கோரகிறோம். அந்தக் கொள்கையில் செயற்பட்டு வருகின்ற எமது அணியினருக்கு உங்களது முழுமையான ஆதரவை வழங்குங்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் பருத்தித்துறையில் பெருமளவிலான மக்கள் நிறைந்திருந்த கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..;த பத்து வருடங்களாக வாக்குகளைப் பெறுவதற்காக மக்களிடம் கொள்கைகள் குறித்து பேசி வந்த கூட்டமைப்பினர் தேர்தலின் பின்னர் அந்தக் கொள்கைகளைக் கைவிட்டு செயற்படுகின்றனர்.
அவ்வாறானதொரு நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலையே ஒற்றையாட்சி அரசமைப்பை பாராளுமன்றத்திலும் கொண்டு வந்திருக்கின்றனர். அதனை எமது மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே அந்த அரசியல் சானத்தை நிறைவேற்றுவதற்கு கூடு;டமைப்பினர் செயற்படுகின்றனர்.
ஆனால் எமது மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான அல்ல மாற்றான முறையில் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளும் கைங்கரியம் நடக்கிறது. இதனை மக்கள் சரியான முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த விடயங்களில் எமது தரப்பைப் பொறுத்தவரையில் கொள்கையில் உறுதியாக நேர்மையாகப் யணிக்கின்ற ஒரு தரப்பாக உள்ளது.
இது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் எங்களை முடக்குவதற்கு பல சதிகள் நடக்கின்றன. இந்த சதிவலைகளுக்குள் மக்கள் அகப்பட்டு விடக் கூடாது. உங்களது இருப்பையும் வாழ்வையும் எதிர்காலத்தையும் வளமாக்க சரியான தரபபை நீங்கள் தெரீவு செய்து அனுப்ப வேண்டும். என்றார்.
Post a Comment