13ஆவது ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில் இம்முறை எந்த அணி சம்பியன் கிண்ணத்தை ஏந்தும் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும்இ தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ கணித்துள்ளார்.
நடப்பு தொடரில் மூன்று முறை சம்பியன் பட்டம் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிஇ இம்முறையும் மகுடம் சூடும் என பிரெட் லீ குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில் 'ஐக்கிய அரபு அமீரகம் சூழ்நிலை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும். இதனால் அந்த அணிக்குத்தான் வாய்ப்பு. அவர்களுடைய பலமேஇ வீரர்கள் முதிர்ச்சி அடைந்தவர்களாகவும்இ வயதானவர்களாகவும் இருப்பதுதான். இளம் வீரர்கள் அணியில் உள்ளனர். என்றாலும் அவர்களை சுற்றி நீண்ட காலம் விளையாடிய வீரர்கள் வளம் வருகிறார்கள். இது அவர்களுடைய மிகப்பெரிய பலம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அடுத்த இரண்டு மூன்று வாரங்களின் வானிலையை நான் பார்த்த வரைக்கும் 40 டிகிரி வரை இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் ஆடுகளம் உறுதியாக டர்ன் ஆகும் வகையில் இருக்கும். இது சென்னை அணிக்கு மற்றொரு சொந்த மைதானம் போன்று இருக்கும் என உணர்கிறேன். அவர்களுடைய அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களும் பந்தை டர்ன் செய்வார்கள். அவர்களுக்கு இந்த தொடர் மிகவும் சரியானதாக இருக்கும். அவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது' என கூறினார்.
13ஆவது ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர்இ செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment