தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றம் கூடி ஒரு வருடத்திற்குள் புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றி எமது பிரச்சனைக்குத் தீர்வைக் காண வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் யாழில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
இந்தப் பாராளுமன்றத் தேர்தல் அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படுகிறது. நான் மாத்திரமல்ல இந்த நாட்டில் வாழும் சமூகமும் சர்வதேச சமூகமும் முக்கியமான தேர்தலாகக் கருதுகின்றது. அதற்கு காரணம் என்னவென்றால் இந்தப் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பிறகு அல்லது பாரர்ளுமன்றம் கூடிய பிறகு ஒரு முக்கிய அரசியல் சாசனம் முன்வைக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
இந்த நாட்டில் இருந்து வந்த அரசியல் சாசனங்கள் எல்லாவற்றையும் தமிழ் மக்கள்; விசேசமாக வட கிழக்கில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள 1957 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் நேரடியாக நிராகரித்து வந்திருக்கிறார்கள். அது எமக்குரிய அரசியல் சாசனம் அல்ல. அதில் உள்ள ஆட்சி முறை எமக்குரியது அல்ல. அதற்கு நாம் ஆதரவைத் தெரிவிக்க முடியாது என்ற கருத்தைக் கூறி தமது நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றார்கள்.
அம்மையார் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்த பிறகு அப்பொழுது நிறைவேற்றப்பட்ட இரண்டாவது குடிவரவு அரசியல் சாசனத்தை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்று கேட்டு அதை மக்கள் நிராகரித்தார்கள். 94 ஆம் ஆண்டிற்கு பின் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் அது பாராளுமன்ற தேர்தலோ ஐனாபதித் தேர்தலோ மக்கள் நிரந்தரமாக அரசியல் சாசனத்தை நிராகரித்து வந்திருக்கிறார்கள். ஆனபடியால் இன்றைக்குள்ள அரசியல் சாசனம் எதுவும் எமது மக்களுடைய சம்மதத்துடன் மக்களுடைய இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனம் அல்ல.
ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட உலகளாவிய சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் சாசனம் நடைமுறையில் முறையாக இருப்பதற்கு அது மக்களுடைய இணக்கப்பாட்டை பெற வேண்டும். மக்கள் அந்த அரசியல் சாசனத்தை அங்கீகரிக்க வேண்டும். ஆதரிக்க வேண்டும். தமது சம்மதத்தை தெரிவிக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் பார்க்கின்ற பொழுது தற்பொழுதுள்ள அரசியல் சாசனங்களோ இதற்கு முன்பிலிருந்த அரசியல் சாசனங்களோ இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரதும் இணக்கப்பாட்டுடன் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சாசனம் அல்ல. ஆனபடியால் இந்த நாட்டில் தேவையான முதல் சட்டமான அரசியல் சாசனம் இல்லை.
இங்கு பாராளுமன்றம் இயங்கிய பொழது இரண்டு கட்சிகளுக்கிடையில் கூட்டாட்சி நடைபெற்ற பொழுது. பாராளுமன்றம் ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற வேண்டுமென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அப்பொழுது பாரர்ளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றியமைக்கப்பட்டது. அதற்கமைய நடவடிக்கை குழு நியமிக்கப்பட்டது. பல உப குழுக்கள் நியமிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்கு பொறுப்பாக ஒரு நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டது. அதற்கமைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அரசியல் சாசனம் புதிதாக உருவாக்குவதற்கு விசேசமாக மூன்று விடயங்கள் சம்மந்தமாக அதாவது முதலாவது ஐனாதிபதி ஆட்சிமுறை இரண்டாவது பாராளுமன்ற தேர்தல் முறை மூன்றாவதாக தேசிய பிரச்சனை. அதாவது தமிழ் மக்களுடைய அதிகாரம் சம்மந்தமான கோரிக்கை.
இந்த விடயங்கள் சம்மந்தமாக அரசியல் சாசனம் தங்களுடைய கருத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு புதிய முறைகள் வேண்டுமென்ற கருத்து உள்வாங்கப்பட்டு பல கருமங்கள் நிறைவேற்றப்பட்டு அதற்கமைய அரசியல் நடவடிக்கைக் குழு நியமிக்கப்பட்டு அந்தக் குழுவில் நானும் சுமந்திரனும் உறுப்பினர்களாக கடமையாற்றியிருந்தோம்.
அதற்கமைய கருமங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் துரதிஸ்ரவசமாக அவை நிறைவேற்றப்படவில்லை. காரணம் என்னவெனில் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு அரசாங்கத்தில் பெரும்பான்மை இழந்ததால் அது நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. ஆனால் தேசியப் பிரச்சனைகள் உள்ளடங்கலாக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமென பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி அது சம்மந்தமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்டு முடிவுறாமல் இடைநடுவில் இருக்கின்ற பொழுது அதனைத் தொடர்ந்து முடிக்க வேண்டியது எமது மிக முக்கியமான கடமை.
தந்தை செல்வா அவர்கள் 1949 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஒரு கொள்கையை முன்வைத்து ஆரம்பித்தார். அதாவது இந்த நாட்டில் எமது மக்களுக்கு உரிமையில்லை. எமது மக்களுடைய இறையான்மை மதிக்கப்படவில்லை. பல விதமான அநீதிகள் ஏற்படுகின்றன. பலவிதமான தவறுகள் ஏற்படுகின்றன.
இவற்றை நாங்கள் திருத்த முடியாமல் இருக்கின்றோம். அதற்கு காரணம் என்னவென்றால் எமது கையில் அதிகாரம் இல்லை. எமது கையில் ஆட்சி அதிகாரம் இல்லை. ஆனபடியால் எமது மக்கள் தங்களுடைய இறையாண்மையின் அடிப்படையில் ஆட்சி அதிகாரங்களைப் பெற வேண்டும்.
நாட்டினுடைய ஆட்சி முறை மாற்றியமைக்கப்பட்டு ஒற்றையாட்சி முறை என்பது சமஷ்டி ஆட்சிமுறையாக மாற்றப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்தத்தப் பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய இறையாண்மையின் அடிப்படையில் அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடிய நிலைமை ஏற்பட்டால் தான் நாட்டில் மக்கள் சமத்துவமாக வாழலாம் என்ற கருத்தை தந்தை செல்வா முன்வைத்திருந்தார்.
56 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரையில் கடந்த 65 வருடங்களுக்கு மேலதிகமாக தமிழ் மக்கள் விசேமாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அதை ஆமோதிததிருக்கின்றார்கள். அதை எவரும் மறுக்க முடியாது. இது தான் நிலைமை. இதை முன்னெடுப்பதற்கு நாங்கள் கடும் முயற்சி எடுத்திருக்கின்றோம். பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம் இந்திய இலங்கை ஒப்பந்தம் 13 ஆவது அரசியல் சாசனத் திருத்தம் என பல இருக்கிறது.
இவற்றில் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டது. வுடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழ் பேசும் மக்கள் நிரந்தரமாக வாழ்ந்து வந்த பிரதேசங்கள் என்ற அடிப்படையில் ஒரு மாகாண சபை உருவாக்கப்பட்டது. தேர்தல் நடாத்தப்பட்டது. ஒரு முதலமைச்சர் தெரீவு செய்யப்பட்டார். ஒரு ஆளுநரடன் அமைச்சுத்துறையும் மாகாண சபையுடன் இணைந்த வடகிழக்கு செயற்படுத்தப்பட்டது. அதன் பின் பல்வெறு குழப்ப நிலைமைகள் காரணமாக ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.
நாங்கள் 13 ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால் அதில் பல குறைகள் இருந்தன. முன்னேற்றம் இருந்தாலும் பல குறைகள் இருந்தன. அதனால் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பிறகு நாங்கள் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் பேசி ஐனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அம்மையார் சந்திரிகா மகிந்த ராஐபக்ச மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க என எல்லாருடைய ஆட்சிக் காலத்திலும் அவர்களுடைய அரசாங்கத்துடன் பேசி இந்தக் கருமத்தை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம்.
இதனால் காணி கல்வி சுகாதாரம் சட்டம் ஒழுங்கு சம்மந்தமாக பல விடயங்கள் சம்மந்தமாக பல முன்னேற்றங்களை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். ஆனபடியால் 1949 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த 70 வருடங்களுக்கு மேலதிகமாக நாங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு கடும் முயற்சிகள் எடுத்து அந்தக் கருமத்தை நாங்கள் முன்னெடுத்து இன்றைக்கு நியாயமான அளவிற்கு அந்தக் கருமத்தை முடிவடையக் கூடிய நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
ஆகச் செய்ய வேண்டிய விடயம் என்னவெனில் இந்தக் கருமங்கள் எல்லாவற்றையும் படித்து வரைபை ஏற்படுத்தி அந்த வரைபை பாரர்ளுமன்றத்திற்குச் சமர்ப்பித்து அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும். அது தான் இருக்கக் கூடிய நிலைமையாக உள்ளது. இன்றைக்கு சர்வதேச சமூகம் எமக்குப் பின்னால் நிற்கின்றது.
கோத்தபாய ராஐபக்ச ஐனாதிபதியாகத் தெரீவு செய்யப்பட்டு இரண்ட நாட்களுக்குள் பாரதப் பிரதமர் தனது வெளிவிவகார அமைச்சரை ஒரு தெளிவான செய்தியுடன் இலங்கைக்கு அனுப்பியிருந்தார். அதாவது தமிழ் மக்களுஐடய பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தான் அந்தச் செய்தி அமைந்திருந்தது. தமிழ் மக்களுடைய பிரச்சனை நீதியின் அடிப்படையில் சமத்துவத்தின் அடிப்படையில் கொளரவத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்றிருந்தது.
ஒரு பிராந்திய வல்லரசு அயல்நாடு பெரிய நாடு உலகத்தில் சக்தி வாய்ந்த நாடு ஆனபடியால் அவர்களின் குரலை மதிக்கின்றவர்கள் அந்தப் பெரிய நாடு அயல் நாடான இலங்கைக்கு ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறது என்றால் அதனுடைய விளக்கம் என்ன.
நரேந்திர மோடிக்கு முன்னர் இருந்த பிரதம அமைச்சர் கலாநிதி மன்மோகன்சிங் அவரை நானும் சுமந்திருனும் பல தடவைகள் சந்தித்திருக்கிறோம். அப்போது அவர் பகிரங்கமாக கூறியிருந்தது என்னவெனில் இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரiஐகளாக நடாத்தப்படுகின்றார்கள் அது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல. அதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அடிப்படை விடயங்களில் அதிகாரம் வேறு விதமாக பயன்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரiஐகளாக நடாத்துவதை நிறுத்த வேண்டும். அது நிறுத்தாவிட்டால் அது தமிழ் மக்களைப் பாதிக்கின்ற செயல் மாத்திரமல்ல இலங்கை இந்திய உறவைப் பாதிக்கின்ற செயல்.
பாரதமர் ரஐpவ் காந்தி nஐயவர்த்தனவுடன் ஒப்பந்தம் செய்த போது இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. இலங்கையில் சிங்கள மக்கள் வாழ்கிறார்கள் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் முஸ்லீம் மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவருக்கு தனித்துவம் உண்டு. அந்த தனித்தவம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். வடகிழக்கில் சரித்திர ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அந்த அடிப்படையில் வடகிழக்கு இணைந்து ஒரு அதிகாரப் பகிர்வு அலகாக உருவாக வேண்டும். அது மிகவும் தெளிவான நிலைப்பாடு.
இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற பொழுது கூட்டுக் கதிரையில் பங்குபற்றினார்கள். தங்களுடைய கருத்தை தெரிவித்தார்கள். இலங்கை அரசாங்கமும் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தது. அடிப்படை மாற்றங்களைச் செய்து அதிகாரப் பரவலாக்களைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒரு தீர்வைக் காணுவோம் என்று. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தியாவிற்கு வாக்குறுதி கொடுத்தார்கள். 13 ஆவது அரசியலமைப்பை முழுமையாக நிறைவேற்றி அதன் மீது அதிகாரப் பகிர்வைக் கட்டியெழுப்பி ஒர் ஆக்கபூர்வமான நியாயபூர்வமான தீர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோம் என்று கூறினார்கள். ஆனால் செயற்படவில்லை. ஆனபடியால் புதிய பாராளுமன்றம் உருவாகிய பின்னர் எம்மை நோக்கி பல சவால்கள் இருக்கின்றன. எல்லாம் பதிவில் இருக்கின்றது. எதையும் எவரும் மறுக்க முடியாது.
ஒருமுறை பாராளுமன்றில் நான் பேசி பொழுது மகிந்த ராஐபக்சவும் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து நான் கேட்டேன் .2006 ஆம் ஆண்டு ஆடி மாதம் 11 ஆம் திகதி நீங்கள் நிகழ்த்திய உரையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வைக் கொடுக்க வேண்டும். என்று. ஆகவே அந்தந்த மக்கள் தாங்கள் வாழ்கின்ற பிராந்தியங்களில் தங்களுடைய விருப்பத்தின்படி தங்களுடைய இணக்கப்பாட்டின் படி தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ளகிறீர்களா மறுக்கிறீர்களா சொன்னீர்களா சொல்லவில்லையா என்று நான் கேட்ட போது மௌனம் காத்தார் பதில் இல்லை. இந்த நிலைமை மாறா வேண்டும்.
எங்களது அதிகாரத்தை நாங்கள் பெற வேண்டும். அது எமது பிறப்புரிமை. ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தங்களின் அடிப்படையில் குடியியல் மனித உரிமைகள் சம்மந்தமான ஒப்பந்தம் பொருளாதாரம் சமூகம் கலாச்சார சம்மந்தமான ஒப்பந்தங்கள் இலங்கையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் . ஒரு மக்கள் குழாமிற்கு தனித் தேசிய இனத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அது மறுக்கப்பட்டால் அவர்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமை உண்டு.
ஆனபடியால் இந்தச் சவால்களை எதிர்நோக்க வேண்டிய தமிழ்க் கட்சியொன்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எமது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியது அத்தியாவசியம். மிகவும் முக்கியம். இலங்கை அரசுடனும் ஏனைய கட்சிகளுடன் இலங்கை அரசியல் தலைவர்களுடன் சர்வதேச சமூகத்துடனும் இந்த விடயங்கள் சம்மந்தமாக உரையாடி அதற்குருpய நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையினுடைய ஒப்பந்தங்களை எவரும் எப்படி மீறலாம்.
யுத்தம் முடிவடைந்த பிறகு செயலாளர் நாயகம் இங்கே வந்த போது மகிந்த ராஐபக்சவும் அவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் அது என்னவெனில் அதிகாரப் பகிர்வின் மூலமாக நாங்கள் பிரச்சனையைத் தீர்ப்போம் என்று. ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது ஒரு கருமம் கூறப்பட்டிருந்தது. அதில் அதிகாரப் பகிர்வின் மூலமாக ஒரு நியாயமான அரசியல் தீர:வு ஏற்பட வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.
இவை எல்லாவற்றையும் மீறி எப்படி அரசாங்கம் செயற்படுகின்றது. இன்றைக்கு அரசியல் சாசனம் நாட்டில் இல்லை. நாடு இன்றைக்கு ஒரு சட்டம் இல்லாமல் ஆட்சி செய்யப்படுகிறது. சிறிலங்கா ஒரு பிளவடைந்த நாடு என்ற நிலைமையை அடைந்திருக்கிறது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். சமத்துவத்தின் அடிப்படையில் எல்லா மக்களும் சமமாக வாழ்வதற்கு ஒரு தீர்வு வர வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதற:கு இவற்றை அடைவதற்கு ஒரு பலம் வாய்ந்த அணி தமிழ் மக்கள் சார்பாகச் செல்ல வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் நூற்றுக் தொன்னூற்றி ஒன்பது வீதம் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் ஏழு உறுப்பினர்களையும் நாங்கள் பெற வேண்டும். 7 இடங்களிலும் நாங்கள் வெற்றியடைய வேண்டும். அதனை நாங்கள் செய்யலாம். நான் அறிந்தவகையில் மக்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள். போதிளவு பிரச்சாரம் செய்து போதியளவு மக்களுக்கு கருமங்களை விளக்கி செயற்பட வேண்டும்.
நாங்கள் தேர்தலுக்காக முளைக்கிற கட்சியல்ல. நாங்கள் 59 ஆம் ஆண்டு தொடக்கம் தந்தை செல்வாவால் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு தந்தை செல்வாவினுடைய பாதையில் தொடர்ந்து நடந்து வளர்ந்து நாங்கள் வளர்ச்சியடைந்தவர்கள். எமது மக்கள் சம்மந்தமாக அவர்களுடைய உரிமைகள் சம்மந்தமாக எமக்கொரு தெளிவான விளக்கம் இருக்கின்றது. எல்லாவற்றிலும் நாங்கள் பங்குபற்றியிருக்கின்றோம்.
யுத்தம் நடந்த பொழுதும் யுத்தம் நடக்க முதலும் யுத்தம் முடிவடைந்த பிறகும் நாங்கள் பங்குபற்றியிருக்கிறோம். எங்களுக்கு எல்லாம் தெரியும் நாங்கள் எல்லாவற்றிலும் அனுபவப்பட்டவர்கள் ஆனபடியால் நிங்கள் திறமான ஒரு வெற்றியை தந்து ஒரு பலமான அணியை பாராளுமன்றத்திற்கு அனுப்பி எங்களுடைய மக்கள் சார்பில் பாராளுமன்றம் கூடி ஒரு வருட காலத்திற்குள் ஒரு புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றி எமது பிரச்சனைக்கு தீர்வைக் காண வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
Post a Comment