தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி சிறிதரனுக்கு வழங்கப்பட்டால் அதற்கு எனது ஆதரவை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ,சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக தமிழரசின் தலைவரின் மனும் கட்சியின் பொருளாளரும் வேலை செய்தார்கள். அதனை நான் தலைவரிடமும் முறையிட்டிருந்தேன். இவ்வாறு கட்சியில் உள்ள பலரும் என்னைத் தோற்கடிக்க வேண்டுமென பிரச்சாரம் செய்தார்கள்.
அதிலும் சக வேட்பாளர்கள் கூட என்னை தோற்கடிப்பதற்கு பல சதி நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். குறிப்பாக சக வேட்பாளரின் பத்திரிகை ஒன்று என்னைத் தோற்கடிக்க வேண்டுமென தலைப்புச் செய்தியைக் கூட பிரசுரித்திருந்தது.
இவ்வாறான சதி நடவடிக்கைகள் குறித்து நான் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் பல தடவைகள் முறையிட்டிருந்த போதும் அதற்கு எதிராக எந்தவித நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை.
தேர்தல் காலம் என்பதால் அதனை நான் பகிரங்கப்படுத்தாமல் இருந்திருந்தேன். இப்போது தேர்தல் முடிவடைந்திருப்பதால் அந்த உண்மைகளை வெளிப்படுத்துகிறேன்
. அதிலும் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் நான் நேரில் சென்று இந்த விடயங்களை சுட்டிக் காட்டியிருப்பது மாத்திரமல்ல எனக்கும் சிறிதரனுக்கு எதிராக சதி செய்தவர்கள் தோற்றுப் போயிருக்கின்றனர்.
நாங்கள் இருவரும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் படியும் கூறியிருக்கின்றேன்.
மேலும் தமிழரசின் தலைமைப் பதவியை ஒருமித்து வழங்கிளால் அதனை ஏற்கத் தயார் என்று சிறிதரன் கூறிpருக்கின்றார். அவ்வாறு அவருக்கு தமிழரசு தலைமை வழங்கப்படுமிடத்து அதனை நான் ஆதரிப்பேன். என்றார்.
Post a Comment