தேர்தல் வீழ்ச்சிக்கு கூட்டுப் பொறுப்பை அனைவரும் ஏற்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கட்சிக்குள் இருக்கின்றவர்கள் வேறுவாரி பூசுகின்ற வேலையைச் செய்யக் கூடாதென்றும் கேட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் யாழ் கிளைக் கூடு;டம் இன்று நடைபெற்றது; இதன் முடிவில் ஊடகங்களுக்கு சிவஞர்னம் கருத்து வெளியிடும் போது கூடு;டமைப்பின் தேர்தல் சரிவு தொடர்பில் ஊடகவியியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்..
நடைபெற்ற தேர்தலில் எமது கட்சி பின்னடைவைச் சந்தித்து இருக்கின்றது என்பது உண்மை தான். அது வெறுமனே தமிழரசுக் கட்சி மாத்திரமல்லாமல் கூட்டமைப்பாக வீழ்ச்சியடைந்திருக்கிது. ஆதற்கு வெறுமனே தனிநபரிலோ வேறு நபர்களிலோ குழுவிலோ குற்றஞ்சாட்ட முடியாது.
ஆதற்கு எல்லாருமே பொறுப்பு. கட்சியில் இருக்கிற செயற்பாட்டாளர்கள் அல்லது கட்சியில் குறிப்பாக முன்னிற்கிறவர்கள் பொறுப்பெடுக்க வேண்டும். உண்மையில் அது தான் ஐனநாயகம் அது தான் தலைமைத்துவம்.
ஆக வெறுமனே ஆளையாள் மாறி மாறி குற்றஞ்சாட்டாமல் அல்லது தலைமையை மட்டும் குற்நறறுஞ்சாட்டாமல் எல்லாரும் தான் ஆந்தப் பொறுப்பை கூட்;டுப் பொறுப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இதில் நாங்கள் எப்படி குறைபாடுகளை நிவர்த்தி செய்து முன்னேறலாமே தவிர ஆளையால் சேறுவாரி பூசுற வேலையைச் செய்யக் கூடாதென்று தான் நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
Post a Comment