தேர்தல் கடமைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று வடமாகாணத்திற்க்கு பொறுப்பான உதவி தேர்தல் ஆணையர் லலித் ஆணந்த தெரிவித்தார்.
நிலைமை கைமீறி போகும் பட்சத்தில் பொலிஸாருக்கு உதவ இராணுவம் பயன்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலின் முன்னேற்பாடுகள் தொடர்பில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதி நிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதி நிதிகள் தமது சந்தேகங்கள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் அலுவலகர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இதன் போதுஇ யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவ்விடையம் தொடர்பில் கடந்த கூட்டத்திலும் எங்களால் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அதிகரித்த இராணுவ நடமாட்டம் இன்னமும் நிறுத்தப்படவில்லை. இராணுவ நடமாட்டம் மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே உள்ளது.
இந்த நிலையில் சுதந்திரமான தேர்தல் நடக்கும் என்று நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்வது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்க்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:-
தேர்தல் கடமைகளில் ஒருபோதும் இராணுவம் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். இராணுவத்தை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தவும் முடியாது.
தேர்தல் கடமைகளில் பொலிஸ் மற்றும் பொலிஸ் படையை சேர்ந்த விசேட அதிரடி படையினர் மட்டும் தான் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இராணுவத்தை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான அதிகாரம் தேர்தல் திணைக்களம் இல்லை. அவ்வாறு இராணுவத்தை பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமாகா இருந்தால் திணைக்களத்தின் ஊடாக
ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியே இராணுவத்தை கடமைகளில் ஈடுபடுத்துவது தொடர்பில் முடிவுகளை எடுப்பார். ஆனால் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் பணிகளில் இராணுவத்தை ஈடுபடுத்துவதற்கான கோரிக்கை எதனையும்
ஆணைக்குழு முன்வைக்கவில்லை.
இருப்பினும் தயால் நிலையில் இராணுவம் இருக்கும். தேர்தலின் போது எதேனும் சம்பவங்கள் நடந்து பொலிஸாரினால் அதனை கட்டுக்குள் கொண்டுர முடியாத நிலை ஏற்படும் போகும் பொலிஸாரினால் இராணுவம் உதவிக்கு அழைக்கப்படும் என்றார்.
Post a Comment