யாழ்ப்பாணக் குடாநாட்டின் மக்கள் தொகையானது 2018ஆம் ஆண்டினை விடவும் ஆண்டுகளாக தொடர்ந்தும் குறைவடைந்து சென்றுள்ளதாக மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கானப்படும் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளின் தரவுகளின் அடிப்படையில் வருடாந்தம் மேற்கொள்ளும் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இவ்வாறான வீழ்ச்சிப் போக்கு கானப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 709 மக்கள் வாழ்ந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 493 மக்களே வாழ்வதாக கண்டறியப்பட்டது. இவ்வாறு 2018இல் கானப்பட்டபோதிலும் 2019-12-31 இன் கணக்கெடுப்பின் பிரகாரமும் 2017 ஆம் ஆண்டின் மக்கள் தொகையை எட்ட முடியவில்லை.
இவ்வாறு மாவட்டத்தின் மக்கள் தொகை வீழ்ச்சிப் போக்கில் செல்லும் நிலையில் பிரதேச செயலக ரீதியில் கணக்கிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 2019இல் 6 லட்சத்து 16 ஆயிரத்து 462 பேரே வாழ்வதாகவே கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , நல்லூர் மற்றும் தெல்லிப்பளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளின் மக்கள் தொகையிலேயே அதிக வீழ்ச்சி கானப்படுகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment