இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சேரா ஹட்டன் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமையில் பல்வேறு வெளிநாடுகளின் பிரதிநிதிகள் இங்குள்ள பலரையும் சந்தித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பிரித்தானிய தூதுவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தேவைகள் உள்ளிடட
எதிர்கால திட்டங்கள் என பல முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment