உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலைகழக மாணவர்கள் - பொலிஸாரின் செயற்பாட்டால் குழப்பம் - Yarl Voice உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலைகழக மாணவர்கள் - பொலிஸாரின் செயற்பாட்டால் குழப்பம் - Yarl Voice

உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலைகழக மாணவர்கள் - பொலிஸாரின் செயற்பாட்டால் குழப்பம்



தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

போராட்ட இடத்தில் கண்காணிப்புக் கடமையிலிருக்கும் பொலிஸார், மாணவர்களை போராட்ட இடத்துக்கு அனுமதியளிக்க மறுத்தனர். எனினும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பொலிஸாருக்கு விடயத்தை எடுத்துக்  கூறியதன் அடிப்படையில் பின்னர் அனுமதித்தனர்.

சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இன்று காலை 9 மணி தொடக்கம் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பலரும் பங்கேற்றுள்ளனர்.

தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டது.

இந்த நிலையிலேயே அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகிறது.





0/Post a Comment/Comments

Previous Post Next Post