பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி தனது 45 ஆவது வயதில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மாரடைப்பு காரணமாக சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
விஜய் டிவி.இயில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் நடிகர் வடிவேலுவை ஒத்ததான நடை உடை பாவனையின் காரணமாக வடிவேல் பாலாஜி எனவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்தவர் இவர் கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்
Post a Comment