இந்திய அரசாங்கத்தின் நிதியுதவில் யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற கலாசார மத்திய நிலையத்தினை, இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பார்வையிட்டுள்ளார்.
விஜயத்தில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதனும் இணைந்திருந்தார்.
குறித்த விஜயத்தின் போது கட்டுமானங்கள் நடைபெற்று முடிந்துள்ள கலாசார நிலையம் பார்வையிடப்பட்டதுடன், மேற்கொள்ள வேண்டிய இறுதி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இராஜாங்க அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சரின் குறித்த விஜயத்தின் போது யாழ் இந்தியத் துணைத் தூதுவர் எஸ். பாலச்சந்திரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் , அமைச்சின் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் மாநகரசபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment