யாழ்ப்பாணம் திருநகர் ராஜசிங்கம் வீதியில் 7 கிராம் 520 மில்லியன் எடையுடைய பொதி செய்யப்பட்ட நிலையில் பத்து சிறிய கஞ்சா பொதிகள் மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது
குறித்த கஞ்சா போதைப்பொருளோடு அப்பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
02.00 மணியளவில் மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த நபர் யாழ் திருநகர் பகுதியில் கஞ்சாவினை மறைத்து உடைமையில்வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் பெண்கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்தநடவடிக்கை எடுத்துள்ளனர்
மதுவரி உதவி ஆணையாளர் வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான
சக மதுவரிபரிசோதகர் V.ரசிகரன் மற்றும் V.அனுஷன்
வாசுகி ஆகியோர் கொண்ட குழு
அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது
அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் முப்படையினர் மற்றும் மது வரித்திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத
Post a Comment