யாழில்கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது - Yarl Voice யாழில்கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது - Yarl Voice

யாழில்கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது






தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட  நால்வர் யாழ்ப்பாணம் குருநகர் அண்ணாசிலை பகுதியில் வீடு ஒன்றில் வைத்து  விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் 

விசேட அதிரடைப்படையினருக்குகிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடு ஒன்றினை சோதனையிட்ட போது அங்கே நான்கு கடல் ஆமைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில்  அந்த வீட்டில் இருந்த குருநகர் பகுதியை சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு 4 கடல் ஆமையின் பாகங்களும் விற்பனைக்கு தயாராக இருந்த இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது கைப்பற்றப்பட்ட கடல் ஆமை 

இறைச்சி மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார்கள்
Previous Post Next Post