ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினரால் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது - Yarl Voice ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினரால் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது - Yarl Voice

ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினரால் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது




 பட்டதாரிகளாக அரச சேவைகள் உள் வாங்கபட்டிருந்த நிலையில் பட்டதாரி நியமனங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்றைய தினம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்


அண்மையில் அரசாங்கத்தினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்களில்  ETF,EPF யினை காரணம் காட்டி பட்டதாரி நியமனம் நிறுத்தப்பட்டுள்ளது அவர்களுக்குரிய மேல்முறையீடுகள்கடந்த 15ஆம் தேதி வரை முன்னெடுக்கப்பட்டு மாவட்ட செயலகங்கள் ஊடாக பிரதேச செயலகங்களில் கையளிக்கப்பட்டது..

எனவே இதன் காரணமாக இடை நிறுத்தப்பட்ட பட்டதாரிகளுக்கானநியமனத்தை  உடனே வழங்குமாறு ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஊடாக இன்றைய தினம் இலங்கையில் அனைத்து மாவட்ட  செயலகங்களிலும் மகஜர் கையளித்திருந்தனர் அதன டிப்படையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் கையளிக்கப்பட்டது  ..


பட்டதாரிகளினால் மங்கையர் கையளிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்

இன்றைய தினம் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினர் என்னை சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகள் அடங்கிய அதாவது சில ஊழியர் சேமலாப நிதி காரணத்தினால் அவர்களுடைய நியமனங்கள் நிறுத்தப்பட்டவர்கள் இன்று என்னை வந்து சந்தித்து அதனை துரிதப்படுத்துமாறு கோரிக்கை அடங்கிய மகஜரினை என்னிடம் கையளித்தனர் உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு என்னிடம் கையளித்துள்ளார்கள்.

 என்னை பொருத்தவரைக்கும் அரசாங்கம் அவர்களுடைய கோரிக்கையினைசெவிமடுத்து மேல்முறையீடு சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை வழங்கி யிருந்தது அந்தக் காலப் பகுதிக்குள் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுக்கு நியாயமான காரணங்கள் இருப்பின் அதனை சாதகமாக பரிசோதனை செய்து ஒரு தகுந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கும் என நம்புகின்றேன் 

மேலும்  கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பத்தினை இணையத்திலும் அதனைப் பார்க்கக் கூடியதான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதற்கான தீர்மானம் மிக விரைவில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படும் அல்லது ஜனாதிபதி செயலகத்தினால் விரைவில்  அறிவிக்கப்படும் என நம்புகின்றேன் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post