கர்த்தாலினால் முடங்கியது யாழ்ப்பாணம் ... - Yarl Voice கர்த்தாலினால் முடங்கியது யாழ்ப்பாணம் ... - Yarl Voice

கர்த்தாலினால் முடங்கியது யாழ்ப்பாணம் ...



ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினைவழங்கியுள்ளார்கள்.

இன்றைய தினம் கர்த்தாலினாள் யாழ்ப்பாண நகரம்முற்றாக முடங்கியது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன பொதுமக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன

 10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 அந்த அழைப்பிற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி  தமிழ் மக்கள் தமது ஆதரவினை அளித்துள்ளார்கள்.

எனினும் நேற்றைய தினத் திலிருந்து அரசஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் இன்றைய கர்த்தாலினை குழப்புவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தமிழ் மக்கள் கத்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கி உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது







0/Post a Comment/Comments

Previous Post Next Post