ஐ.பி.எல் போட்டி இன்று ஆரம்பம் - Yarl Voice ஐ.பி.எல் போட்டி இன்று ஆரம்பம் - Yarl Voice

ஐ.பி.எல் போட்டி இன்று ஆரம்பம்


இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரானது இன்று ஆரம்பமாகின்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இலங்கை நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள நடப்புச் சம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ்இ சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியுடனேயே இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

அபுதாபிஇ டுபாய்இ சார்ஜா என மூன்று மைதானங்களிலேயே இம்முறை தொடர் இடம்பெறவுள்ளதுடன்இ இவ்வாண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

கொவிட்-19-க்கு மத்தியில் இத்தொடர் இடம்பெறுகின்ற நிலையில் பலத்த கட்டுப்பாடுகள்இ வெளியுலகத்தோடு தொடர்பில்லாமல் இருத்தல் என்பன காணப்படுகின்ற நிலையில் வீரர்களின் பெறுபேறுகளை விட அவர்களை மனதளவில் தயார்படுத்தலே அணிகளுக்கு பெரிய சவாலாக விளங்கப் போகின்றது.

சுரேஷ் ரெய்னாஇ ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே தொடரிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post