யாழில் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுத் திட்டப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு - அங்கஐன் உறுதியளிப்பு - Yarl Voice யாழில் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுத் திட்டப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு - அங்கஐன் உறுதியளிப்பு - Yarl Voice

யாழில் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுத் திட்டப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு - அங்கஐன் உறுதியளிப்பு



கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருள்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இன்று (18) நலன்புரி நிலையங்களில் வசித்து சொந்த காணி இல்லதோர்க்கான இலவச காணி கொள்வனவு மீள்டிகுடியமர்ந்தவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் மற்றும் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் கட்டுமானங்கள் காலதாமதம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தெல்லிப்பளை பிரதேச செயகத்தில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தலமையில் இடம்பெற்றது.

 இவ் நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக (காணி) அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தெல்லிப்பளை பிரதேச செயலகர் எஸ் சிவஶ்ரீஇ பிரதேச திட்டமிடல் பணிப்பாளர்இ கிராம சேவகர்கள்இ அரச அலுவலர்கள்இ பயனாளிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இக் கலந்துரையாடலில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் 
கடந்த 14 திகதி யாழ் வருகை தந்த வீடமைப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர்  இந்திக்க அனுருத்த அவர்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வீட்டுத்திட்டம் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பில் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு நிலமைகள் தொடர்பில் அறிந்து கொண்டுள்ளார். அவர்களுக்கு நானும் யாழ் மாவட்டத்தின் வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் விளக்கம் தெரிவித்திருந்தேன். 

அந்த விடயம் தொடர்பில் அதிகூடிய கரிசணை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த உறுதியளித்தார். அது மட்டுமின்றி வீடமைப்பு தொடர்பான அமைச்சராக இருக்கும்  பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அவர்கள் வடபகுதி மக்களின்  வீட்டுத்திட்ட பிரச்சனை தொடர்பில் அதி கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.

மற்றும் 2009 ஆம் ஆண்டிலிருந்து பல அரசாங்கங்கள் மாறிவிட்டது நிம்மதியான இருப்பிடங்கள் தேடிய உறவுகளின் தலைமுறைகள் மாறப்போகிறது ஆனால் நிரந்தர தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை! 

எமது இந்த புதிய அரசாங்கம் மூலம் விரைவில் காணி அற்றவர்களுக்கான காணி கொள்வனவுஇ வீடுகள் இல்லாமல் தவிப்போருக்கான வீட்டுத்திட்டங்களை இனம்கண்டு வழங்கல் நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடுகள் வழங்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பெற்று மக்களுக்கு கொடுப்போம். 

எமது ஜனாதிபதி கூட நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வீடமைப்பு சம்மந்தமான கலந்துரையாடலின் போது வட மாகாணத்தில் 22 நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற 409 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து மீண்டும் உடனடியாக அவர்களை மீள்குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். 
என்றார்.

10 லட்சம் பெறுமதியான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்ட 70 குடும்பங்களின் வீட்டுத்திட்ட கட்டுமானம் பிந்திய நிலமையில் காணப்படுவதன் காரணங்கள் கண்டறியப்பட்டு விரைவாக கட்டுமான பணிகளை முடிவுறுத்த பயனாளிகளிற்கு அங்கஜன் இராமநாதன் அறுவுறுத்தினார்.

மற்றும் அரசாங்கத்தினால் காணி இல்லாதோரிற்கு இலவச காணி கொள்வனவிற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் தமக்கு தேவையான காணிகள் இனம்காண்பதற்கு காலதாமதம் ஆகின்றது என தெல்லிப்பளை பிரதேச செயலகர் எஸ். சிவஶ்ரீ சுட்டிக்காட்டினார். 

ஒதுக்கப்பட நிதி தங்களது கால தாமத்தால் திரும்ப சென்றால் தமக்கு மட்டுமல்ல அடுத்தகட்டம் இனம்காணப்படவுள்ள பயனாளிகளுக்கும் நிதியை பெற்றுக்கொள்ளாமல் போய்விடும் எனவே விரைவாக காணிகளை இனம்காணுமாறு பயனாளிகளுக்கு அங்கஜன் இராமநாதன் வேண்டியிருந்தார்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post