புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபாய்நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது .
குறித்த நிதியானது பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் சிபாரிசுக்கு அமைவாக இந்து சமய , கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் நிதி உதவி கோரி விண்ணப்பித்து தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கு இவ் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது .
ஒரு இலட்சம் ரூபாய் பெறுவதற்கான படிவத்தினை அங்கஜன் இராமநாதன் ஆலய பரி பாலனசபையினரிடம் வழங்கி வைத்திருந்தார் . குறித்த படிவத்தினை அந்தந்தப் பகுதி பிரதேச செயலகங்களில் உரிய ஆவணங்களுடன் கையளித்து நிதியினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment