இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு - அமைச்சர் டக்ளஸ் - Yarl Voice இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு - அமைச்சர் டக்ளஸ் - Yarl Voice

இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு - அமைச்சர் டக்ளஸ்


வாழை தோட்டம் பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம்  உழுந்து கஜீ போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(15.09.2020) இடம்பெற்ற 'சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி' எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த வருடம் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு  வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் கோரிக்ககை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய கலந்துரையாடலிலும் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டினார். .

இதுதொடர்பில் பதில் அளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேஇ ஏற்கனவே 6 விதமான பயிர் செய்கைகளுக்கு நஸ்டஈடு வழங்கும் ஏற்பாடுகள் மாத்திரம் விவசாய அமைச்சில் காணப்பட்ட நிலையில்இ கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமையஇ மேற்குறிப்பிட்ட பயிர் செய்கைகளுக்கும் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவேஇ எதிர்காலத்தில் குறிப்பிட்ட பயர்செய்கைகள் பாதிக்கப்படும் போது உடனடியாக நஸ்டஈடு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ விவசாய அமைச்சின் குறித்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்ததுடன்இ

அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு ஜனாதிபதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

எனவேஇ அடுத்த அமைச்சரவையில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் இணைந்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி அம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஸ்டஈடு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post