நாளைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கம் பூரண ஆதரவினை வழங்குவதாக அதன் பொருளாளரும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கத் தலைவருமான வே.செல்வகாந்தன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் எதிராக அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் பல்வேறான அடக்குமுறைகளையும் தாண்டி வெற்றியடைந்ததை தொடர்ந்து நாளைய தினம் தமிழ் கட்சிகள் மாத்திரமல்ல தமிழ் இனமே ஒன்றுசேர்ந்திருக்கிறது என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக கருதுகிறோம்.
இந்த போராட்டத்தை வலுவழக்கச் செய்வதற்கும் சிறுமைப்படுத்துவதற்கும் தமிழ் இன விரோதிகள் உட்பட சிங்களப் பேரினவாதத்தின் அரச இயந்திரமும் சேர்ந்து முயற்சிக்கும் என்பதை நாங்கள் அறவோம். இருந்தாலும் தன்மானம் மிக்க தமிழர்களாக நாங்கள் ஒன்றுபட்டோம் என்பதை நாளை இந்த உலகம் பார்க்கும். அதற்காக ஒவ்வொரு கூட்டுறவாளனும் எந்த எல்லைவரை சென்றேனும் வெற்றிபெற செய்வதற்காக எங்கள் ஒவ்வொருவரையும் அர்பணிப்பணித்து களங்காணுவோம். எனவே இந்த நிமிடம் முதல் ஒவ்வொரு கூட்டுறவாளனும் மக்களை விழிப்படையச்செய்கின்ற வரலாற்றுக் கடமையை ஆற்றுமாறு அறைகூவல் விடுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
Post a Comment