யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் யாழ் மாநகரத்திற்குற்பட்ட உணவக உரிமையாளர்கள் குழுவிற்கும் இடையில் விசேட சந்திப்பு யாழ் வணிகர் கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாநகர எல்லைக்குள் நடாத்தப்படுகின்ற உணவகங்களில் பொலித்தீன் பாவனையை தடை செய்தல் தொடர்பில் உணவக உரிமையாளர்களுடன் சந்திப்பு ஒன்றை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்யும் என்றும் அதில் கலந்து கொண்டு குறித்த தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்குமாறும் வர்த்தக சங்கத்தால் முதல்வருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய யாழ் வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் மேற்படி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருநத்து.
இக் கலந்துரையாடலில் யாழ் மாநகரசபை எல்லைக்குற்பட்ட உணவகங்கள் நடாத்துனர்களுக்கு பொலித்தீன் மற்றும் லண்சீற் பாவனையை தடைசெய்தல் தொடர்பிலும், உணவகங்களில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடைமுறைகளுடன் கூடிய மாற்று ஏற்பாடுகள், பொலித்தீன் பாவனையை தவிர்த்து அதற்கு மாற்றீடாக மேற்கொள்ள வேண்டிய மாற்று ஒழுங்கு பற்றிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலின் இறுதியில் மாநகரசபையில் பொலித்தீன் தடை தொடர்பான நடவடிக்கைகளுக்கு உணவம் நடாத்துனர்கள் தாம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும், மாநகரபையுடன் இணைந்து பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அற்ற பசுமை மாநகரை உருவாக்க தமது ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டனர்.
யாழ் வணிகர் கழக தலைவர் ஆர் ஜெயசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதாரப் பரிசோதகர்கள், மாநகர சுகாதாரப் பிரிவினர், வணிகர் கழக உறுப்பினர்கள், உணவக உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட உணவக நடாத்துனர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment