வடக்கு மாகாண கராத்தே பயிற்றுவிப்பாளர்களுக்கு யாழில் செயலமர்வு - Yarl Voice வடக்கு மாகாண கராத்தே பயிற்றுவிப்பாளர்களுக்கு யாழில் செயலமர்வு - Yarl Voice

வடக்கு மாகாண கராத்தே பயிற்றுவிப்பாளர்களுக்கு யாழில் செயலமர்வு


வட மாகாண கராத்தே பயிற்றுவிப்பாளர்களுக்கான விசேட செயலமர்வு யாழ்ப்பாணம் கிரீன் பீல்ட் சனசமூக நிலைய விளையாட்டு கழக மண்டபத்தில்  இடம்பெறுகிறது 


வடக்கு மாகாண  கராத்தே பயிற்றுவிப்பாளர்கள் ,ஆசிரியர்கள் நெறியாளர்களின்  தரத்தை உயர்த்துவதற்காக குறித்த செயல அமர்வு இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது குறித்த செயலமர்வு தொடர்பில் வடக்கு மாகாண கராத்தே சம்மேளன தலைவர் கருத்து தெரிவிக்கையில்


வடமாகாணத்தில் கரேத்தே பயிலும் மாணவர்கள்  கராத்தே துறையில் வளர்ச்சியடைந்து தேசிய ரீதியில் அதாவதுமாவட்ட, மாகாண தேசிய ரீதியில் நிறைய பதக்கங்களை பெற்று முன்னேறிவருகின்றனர்


அதனை மேலும் வலுப்படுத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் உள்ள கராத்தே நெறியாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் தரத்தை உயர்த்தும் முகமாக வடமாகாணத்தில் உள்ள அனைத்துகராத்தே  ஆசிரியர்களுக்குமான விசேட செயலமர்வொன்று  நடாத்தப்படுகின்றது 


அத்தோடு கராத்தே சம்மேளத்தில்  பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நெறியாளர்களைபதிவு செய்து அவர்களில் தரத்தை உயர்த்துவதற்காகவும் இலங்கை கராத்தே சங்கத்தைச் சேர்ந்த இலங்கை ரீதியில் நடுவராக செயற்பட்டுவரும் சிரான் அலெக்சாண்டர் மற்றும் ரவூப் ஆகியோர்   இன்றைய தினம் நெறியாளரார்களாக கலந்துகொண்டு குறித்த செயலமர்வினை மேற் கொண்டுள்ளார்கள் 

அதாவது எமது கராத்தே  ஆசிரியர்களை சரியாக நெறிப்படுத்துவதற்காக இன்றைய தினம் இந்த செயலமர்வு  ஏற்பாடு செய்திருக்கிறோம் 

 வடமாகாண கராத்தே மாணவர்கள் போட்டிகளின்போது வெற்றி பெற முடியாததற்கான காரணங்களை அறி ந்து அதனை மாற்றியமைக்கும் முகமாக இந்த பயிற்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 இலங்கை கராத்தே  சங்கத்தைச் சேர்ந்த வளவாளர்கள் இருவர் கொழும்பிலிருந்து  வரவழைக்கப்பட்டு இன்றைய தினம் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கராத்தே ஆசிரியர்கள் அனைவருக்கும்   இந்த பயிற்சி நெறி வழங்கப்படுகின்றது இந்த பயிற்சியின் மூலம் எதிர்காலத்தில் எமது வடக்கு மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களை வெற்றி அடைய முடியுமென தலைவர் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post