அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைய தினம் சாவகச்சேரி சிவன் கோவில் முன்றலில் உணவுத் தவிர்ப்பு போராட்டதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் பத்திரிகை ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தார்.
அப்பத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம் இருந்தது. அப்போது வந்த ஒரு பொலிஸார் அந்த பத்திரிகையினை பறித்து சென்றார்.
அருகில் இருந்தவர்கள் கடும் எதிர்பினை வெளியிட பறிக்கப்பட்ட பத்திரிகையை குறித்த பொலிஸ் திரும்பக் கொடுத்துவிட்டு சென்றார்.
Post a Comment