பாடசாலை அதிபர்களுக்கு ஐனாதிபதி கோத்தபாய விடுத்துள்ள அறிவுறுத்தல்.. - Yarl Voice பாடசாலை அதிபர்களுக்கு ஐனாதிபதி கோத்தபாய விடுத்துள்ள அறிவுறுத்தல்.. - Yarl Voice

பாடசாலை அதிபர்களுக்கு ஐனாதிபதி கோத்தபாய விடுத்துள்ள அறிவுறுத்தல்..




பிரதமரினதோ எனதோ பெயரைக் கூறியவுடனேயே பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமரினதோ எனதோ மற்றும் உயர் அரச அதிகாரிகளினதோ பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களைத் தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

எனது, எனது செயலக அதிகாரிகளின், பிரதமர் அவர்களின், பிரதமரின் செயலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின் உத்தரவு என்று குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பாடசாலை அதிபர்களுக்கு பலர் கடிதங்களை அனுப்பி வைக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளும் கூட இவ்வாறான கடிதங்களை அனுப்பி வைப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதிபர்கள் தமது பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது அவ்வாறான எந்தவொரு கடிதத்தையும் அடிப்படையாக எடுக்கக்கூடாது.

உரிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கமைவாக மாத்திரமே மாணவர்களைப் பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஒழுங்கு விதிகளை மீறுகின்ற அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை எனது செயலாளர் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post