தமிழ் மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக நாளை முன்னெடுன்னப்படவுள்ள ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண அவைத் தலைவர் சி,வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை நடாத்திய ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..
அரசாங்கம் பல்வேறு அடக்குமறைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியகட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிப்படுத்தி வருகின்றன. இந் நிலையில் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக நாளையதினம் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த ஹர்த்தாலை தடுப்பதற்கு பல சதி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திட்டமிட்ட அந்த முயற்சிகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் ஒருமித்து கர்த்தாலுக்கு ஆதரவை வழங்கி வீட்டில் இருக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
Post a Comment