நீடிக்கும் இந்தியா சீனா எல்லை பதற்றம் - வெளியுறவுத் துறை அமைச்சர் சந்தித்து பேச்சு - Yarl Voice நீடிக்கும் இந்தியா சீனா எல்லை பதற்றம் - வெளியுறவுத் துறை அமைச்சர் சந்தித்து பேச்சு - Yarl Voice

நீடிக்கும் இந்தியா சீனா எல்லை பதற்றம் - வெளியுறவுத் துறை அமைச்சர் சந்தித்து பேச்சு


சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்- யீயை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (வியாழக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாஸ்கோ சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் மாநாட்டிற்கு இடையே வாங்- யீயை சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது  இருநாட்டிற்கும் இடையிலான  எல்லைப் பிரச்சினை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் விளக்குவார் என்றும்இ  கிழக்கு லடாக்கில் சீனா கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். தொடர்ந்து தற்போதைய பதற்ற நிலையைத் தணிக்க இன்றும் இரு அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

இதனிடையே இந்தியாவும்இ சீனாவும் எல்லைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post