தமிழ்த் தேசிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இனக்கம் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம்(18) யாழில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது தற்போதய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற அனைத்துக் கட்சிகளின் கையெழுத்து அடங்கிய கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
நேற்றய கூட்டத்திற்கு வருகைதந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளும் அவற்றோறு தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் ஜனாதிபதிக்கு வழங்கவுள்ள கடிதத்தில் கையப்பமிட சம்மதம் தெரிவித்திருந்தன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட போதும் முன்னணியினர் கலந்துகொள்ளவில்லை.
எனினும் இன்றைய தினம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் கையப்பமிட இனங்கியுள்ளனர்.
வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ வீ கே சிவஞானத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர்களான க.சுகாஸ், ந.காண்டீபன் ஆகியோர் பங்குபற்றினர்.அத்துடன் கடிதத்தில் கையொப்பம் இட்டனர்.
Post a Comment