வடகிழக்கு தழுவிய கதவடைப்பிற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும் - கஜேந்திரகுமார் கோரிக்கை - Yarl Voice வடகிழக்கு தழுவிய கதவடைப்பிற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும் - கஜேந்திரகுமார் கோரிக்கை - Yarl Voice

வடகிழக்கு தழுவிய கதவடைப்பிற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும் - கஜேந்திரகுமார் கோரிக்கை




தமிழ் மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலிற்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டுமென தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது...

ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகளை பிரயோகித்து வருகிறது. இவ்வாறாக அரசின் தொடர் செயற்பாடுகளுக்கு எதிராக இங்கு போராட்டமொன்றையும் நடாத்தியிருந்தோம்.

அதன் தொடராக கதவடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த போராட்டத்தை குழப்புவதற்கு பல்வேறு சதி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆகவே தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கதவடைப்பு போராட்டத்திற்க அனைவரும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவுத்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post