மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் களேபரத்தில் ஈடுபட்ட அம்பிட்டியே சுமனரத்தன தேரர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரன் நாடாளுமன்றில் இன்று கோரிக்கை முன்வைத்தார்.
எனினும் மதத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என்று கருணாகரன் எம்.பி மீது சீறிப்பாய்ந்த பொதுஜன முன்னணியினர் அவரது கூற்றை ஹான்சாட்டிலிருந்து நீக்கும்படியும் வலியுறுத்தினார்கள்.
கோவிந்தன் கருணாகரன் மதங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த மொட்டுக்கட்சி எம்.பி மொஹமட் முஸம்மில்இ அவரது கருத்தை ஹான்சாட்டிலிருந்து நீக்கும்படி வலியுறுத்தினார்.
இதேவேளை கருணாகரன் எம்.பியின் உரையினிடையே குறுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த இவரது கருத்தானது நாட்டில் மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என எச்சரித்தார்.
எனினும் கோவிந்தன் கருணாகரனின் உரைக்குப் பின் சபையில் எழுந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சக எம்.பியின் கருத்தானது மதத்தலைவர்களைக் கொச்சைப்படுத்துவதாக அமைவில்லை.
மாறாக ஒரு பிக்குவின் செயற்பாடு அரசாங்கத்திற்கு அகௌரவப்படுத்தியிருப்பதால் அதுபற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தினார் என்று சுட்டிக்காட்டினார்.
Post a Comment