அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு பொதியில் கொடிய விஷம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் அனைத்து தபால்களும் 'ஆப்சைட் ஸ்கிரீனிங்' முறையில் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டு ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.
அதன்படிஇ கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ட்ரம்புக்கு வந்த ஒரு பொதி வழக்கம்போல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த பொதி வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்பே அதிகாரிகள் அதனைத் தடுத்து சோதித்தனர்.
அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால்இ பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் (எப்.பி.ஐ.) சிறப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதில் ஜனாதிபதி ட்ரம்புக்கு அனுப்பப்பட்ட பொதியில் 'ரிச்சின்' என்ற ஆபத்தான கொடிய விஷ பவுடர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்துஇ டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரிட்ட பொதி எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது? என்பது குறித்து எப்.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்த நிலையில்இ வெள்ளை மாளிகைக்கு ரைசின் விஷப்பொருள் அடங்கிய பொதியை அனுப்பியதாக பெண் ஒருவரை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்கா – கனடா எல்லையில் கைதான அந்த பெண்ணிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment