தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நாளையதினம் முடிவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை யாழில் கூடிய தமிழ்த் தேசிய அணிகள் தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் கலந்துரையாடியிருந்தன.
இதன் போது நாளையதினம் தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பான நீதிமன்ற கட்டளை பிறப்பிக்கப்பட இருக்கின்ற நிலையில் அந்த கட்டளையின் பின்னர் நாளையதினமே மீண்டும் கூடுவதறகும் தீர்மானித்துள்ளன.
இவ்வாறு நாளையதினம் கூடுகின்ற போது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு அதன் பின்னர் அதனை ஊடகங்கள் மூலமாக பகிரங்கப்படுத்தப்படுமென்றும் இக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment