இன்றைய தினம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் அமைந்திருக்கும் வெடுக்குநாறி மலை கோவிலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம் செய்தார் . சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த மலையின் வரலாறானது பல வரலாற்று சிறப்புக்களை கொண்டு காணப்படுகின்றது .
300 m உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ் பிராமிய கல்வெட்டிக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றை காண முடியும் . மலையின் உச்சியில் ஆதிலிங்கேஸ்வர்ர் எனும் சிவனுடைய லிங்கம் அமைந்துள்ளது .
2018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள பலவிதமான தடைகளை விதித்து வருகின்றனர்.
இவ் வருடமும் ஆலய திருவிழாவுக்கு தடை வித்தித்து தற்போது நீதிமன்ற அனுமதி பெற்றே கோவில் பூயை நிகழ்த்தப்பட்டது.
Post a Comment