அமெரிக்கர்கள் அனைவருக்கும் அடுத்த ஏப்ரலில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் - டிரம்ப் நம்பிக்கை - Yarl Voice அமெரிக்கர்கள் அனைவருக்கும் அடுத்த ஏப்ரலில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் - டிரம்ப் நம்பிக்கை - Yarl Voice

அமெரிக்கர்கள் அனைவருக்கும் அடுத்த ஏப்ரலில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் - டிரம்ப் நம்பிக்கை


அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைத்துவிடுமென எதிர்பார்க்கிறேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கி உள்ளன. ரஷியா சீனா அமெரிக்கா இங்கிலாந்து இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. 
 
குறிப்பாகஇ அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

இதற்காக பல தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. தேர்தலை கருத்தில் கொண்டு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் முயற்சியில் அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

இதற்கிடையில்இ அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தயாராகிவிடும் என அதிபர் டிரம்ப் அறித்தார். 

இந்நிலையில்இ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாம் குறுகிய காலத்திலேயே தகுந்த தடுப்பு மருந்தினை பெற்று கொரோனாவை வென்று விடுவோம். அக்டோபர் மாதத்தில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கான அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன்.

தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்த 24 மணி நேரத்திலேயே கொரோனா தடுப்பு மருந்துகளின் விநியோகம் தொடங்கி விடும்.

ஒவ்வொரு மாதத்திற்கும் லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைக்க துவங்கும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post