தேசத்தின் தியாகிகளின் தியாகத்தை இழிவுபடுத்தல் கிழ்த்தரமான செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் இளைஞரணிச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு இனத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக தங்களை அர்ப்பணித்து போராடி உயிர்த் தியாகம் செய்த தியாக தீபங்களை கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும் அதனை பாராட்ட அல்லது ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் இழிவு படுத்தி கொச்சைப்படுத்துதல் மனித குல நாகரிகத்தின் இன்றைய வளர்ச்சிக் காலகட்டத்தில் மிகவும் ஒரு கீழ்தர செயலாகும்.
இவ்லாறான செயற்பாட்டை ஐனநாயகத்தை விரும்பும் எந்த இனமும் இவ் இனம் சார்ந்த மக்கள் கூட்டமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். துட்டகைமுனு எல்லாளனை போரில் வென்றாலும் எல்லாளனது அஸ்தியை வைத்து சமாதி அமைத்து எல்லோரையும் அவ் வீதி வழியாக செல்லும்போது மரியாதை செலுத்துமாறு பணித்ததாக வரலாறு கூறுகின்றது.
இந்த வரலாற்றை கொண்ட இனத்தின் ஆட்சியாளர்கள் இன்று தியாகிகளின் நினைவேந்தலுக்கு நீதித்துறை ஊடாக தடைபோடுவது மிகவும் வெட்கப்பட வேண்டிய விடையம.; அவர்களுடன் இணைந்து அவர்களின் சில சலுகைகளை பெற ஆசைப்படும் கூட்டமும் தங்களை சுய பரிசோதனை செய்யாது இறந்த தியாகிகளை கொச்சைப்படுத்தி வசை பாடுதல் மனிதப் பண்பிற்கே மிகவும் கீழ்த்தரமான செயல் ஆகும். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment