அனலைதீவில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட நபர்களுடன் தொடர்புபட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள தோடு அனலைதீவு பிரதேசம் நேற்று காலையிலிருந்து அப்பிரதேசத்திலிருந்து யாரும் வெளியேறாதவாறும் பிரதேசத்துக்குள் புதிதாக யாரும் உட்பிரவேசிக்காதவாறு முடக்கபட்டுள்ளது.
மஞ்சல் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மூவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுளது. இந்த PCR பரிசோதனை முடிவுகள் வரும் வரை முடக்கம் அமுலில் இருக்குமென்றும் தெரிவிக்கபடுகிறது.
தனிமைப் படுத்தப் பட்டுள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 நபர்களுக்கு மான உலர் உணவுப் பொருட்கள் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினால் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment